மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 13 நவ 2017

கட்டித் தழுவிய மோடி-ட்ரம்ப்

கட்டித் தழுவிய மோடி-ட்ரம்ப்

பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று காலை இந்தியப் பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இருவரும் சந்தித்து ஒருவரையொருவர் கட்டித் தழுவிக்கொண்டனர்.

பிலிப்பைன்ஸ் நாட்டில் நாளை தொடங்கும் ஆசிய உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள 14ஆம் தேதி இந்தியப் பிரதமர் மோடி பிலிப்பைன்ஸ் நாட்டுக்குச் சென்றுள்ளார். இந்த மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க அதிபர் ட்ரம்பும் வந்துள்ளார். இன்று காலை இருவரும் சந்தித்துக்கொண்டனர். பல நாட்களுக்குப் பின்னர் இருவரும் சந்தித்துக்கொண்டதால் கட்டித் தழுவிக்கொண்டனர். சில நிமிடங்கள் மட்டுமே இந்தச் சந்திப்பு நீடித்தது. அப்போது இருவரும் ஒரே நிற ஆடையில் இருந்தனர்.

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெறும் நாளை தொடங்கும் இந்த மாநாட்டில் ஆசிய நாடுகளின் பொருளாதார நிலை மற்றும் ஆசிய நாடுகளுக்கிடையே நிலவும் எல்லைப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படுகிறது. நாளை நடைபெறும் மாநாட்டுக்கு நடுவே அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஜப்பான் பிரதமர் சின்சோ அபே, ஆஸ்திரேலியப் பிரதமர் மார்கம் டர்ன்புல் ஆகியோரைப் பிரதமர் மோடி தனித்தனியாக சந்திக்கவும் திட்டமிட்டுள்ளார். உலகப் பொருளாதார அரங்கில் ஆசிய நாடுகள் பெரும்பங்கு வகிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை! ...

3 நிமிட வாசிப்பு

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

3 நிமிட வாசிப்பு

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

திங்கள் 13 நவ 2017