மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 13 நவ 2017

‘தபாங்’ சீரிஸில் சோனாக்ஷி

‘தபாங்’ சீரிஸில் சோனாக்ஷி

‘தபாங்’ படத்தின் மூன்றாம் பாகத்தில் தானும் நடிப்பதாக பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டில் பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் தபாங். அந்தப் படத்தின் முதல் இரண்டு பாகங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதன் அடுத்த பாகம், ‘தபாங் 3’ என்ற பெயரில் தயாராகி வருகிறது. இந்தப் பாகத்தில் நடிகை சோனாக்ஷி நடிக்கவில்லை என சமீபத்தில் செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் வெளிவந்த அந்தச் செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார் சோனாக்ஷி.

இது குறித்து செய்தியாளர்களுக்குத் தெரிவித்த அவர், “தபாங் 3 படத்தின் வேலைகள் அடுத்த ஆண்டு தொடங்க உள்ளது. இந்தப் படத்தில் நானும் நடிக்கிறேன். தபாங் படத்துக்கு எப்போதும் என் சினிமா வாழ்க்கையில் சிறப்பான இடம் உண்டு. இந்தப் படத்தில் எனது வேடம் குறித்து படக்குழுவினர் அடுத்த ஆண்டு அறிவிப்பார்கள்” என்று கூறியுள்ளார்.

தபாங் 3 படத்தை பிரபுதேவா இயக்க, அர்பஸ் கான் தயாரிக்கிறார். தபாங் சீரிஸின் முதல் இரண்டு பாகங்களிலும் சோனாக்ஷி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை! ...

3 நிமிட வாசிப்பு

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

3 நிமிட வாசிப்பு

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

திங்கள் 13 நவ 2017