மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 13 நவ 2017

படகு கவிழ்ந்து விபத்து: 18 பேர் உயிரிழப்பு!

படகு கவிழ்ந்து விபத்து: 18 பேர் உயிரிழப்பு!

ஆந்திர மாநிலத்தின் கிருஷ்ணா நதியில் படகு கவிழ்ந்த விபத்தில் நீரில் மூழ்கி 18 பேர் உயிரிழந்தனர்.

ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தின் விஜயவாடா அருகிலுள்ள பவானி தீவில் இருந்து பவித்ர சங்கமம் என்ற இடத்துக்குப் படகு மூலம் சிலர் நேற்று (நவம்பர் 12) சுற்றுலா சென்றனர். அந்தப் படகில் சுமார் 38க்கு மேற்பட்டோர் பயணம் செய்தனர். அவர்கள் சென்ற படகு அதிக பாரம் தாங்காமல் ஆற்றில் கவிழ்ந்தது. இதில், சுற்றுலாப் பயணிகள் அனைவரும் நீரில் தத்தளித்தனர். இதில், 15 பேரை உள்ளூர் மக்கள் மீட்டனர். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் நீரில் தத்தளித்துக் கொண்டிருந்தவர்களை உடனடியாக மீட்கும் பணியில் ஈடுபட்டனர். நீச்சல் தெரியாத பலர் இந்தச் சம்பவத்தில் நீரில் மூழ்கி இறந்தனர். இந்த விபத்தில் சிக்கிய 14 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஆந்திர மாநில டி.ஜி.பி. சாம்பசிவ ராவ் தெரிவித்தார். நீரில் மூழ்கியவர்களைத் தேடும் பணியிலும், அந்தப் பகுதியில் சிக்கியவர்களை மீட்கும் பணியிலும் பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை! ...

3 நிமிட வாசிப்பு

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

3 நிமிட வாசிப்பு

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

திங்கள் 13 நவ 2017