மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 13 நவ 2017

வெங்காய இறக்குமதியில் இந்தியா!

வெங்காய இறக்குமதியில் இந்தியா!

நடப்பு ஆண்டின் ஏப்ரல் - ஜூலை காலகட்டத்தில் இந்தியாவில் வெங்காய ஏற்றுமதி 56 சதவிகிதம் அதிகரித்திருந்தது. ஆனால், தற்போது வெங்காயத்தின் விலை கிலோவுக்கு 65-70 ரூபாயாக அதிகரித்துள்ளதால், விலையைக் கட்டுப்படுத்த வெங்காயம் இறக்குமதி செய்யப்படுகிறது.

ஏப்ரல் - ஜூலை காலகட்டத்தில் வெங்காய ஏற்றுமதியின் மதிப்பும் கூட 47.69 சதவிகிதம் அதிகரித்து 1,443.09 கோடி ரூபாயாக இருந்தது. கடந்த ஆண்டின் ஏப்ரல் - ஜூலை காலகட்டத்தில் வெங்காய ஏற்றுமதியின் மதிப்பு 997.84 கோடி ரூபாயாக இருந்துள்ளது. கடந்த வாரத்தில் எம்.எம்.டி.சி. போன்ற அரசு ஏஜென்சிகளுக்கு எகிப்து, சீனா போன்ற நாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்துகொள்ள மத்திய அரசு அனுமதியளித்தது. வெங்காய இருப்பை அதிகரிக்கவும், சில்லறை விலையைக் கட்டுப்படுத்தவும் இந்த அனுமதியை மத்திய அரசு அளித்தது.

வர்த்தக புலனாய்வு மற்றும் புள்ளிவிவர பொது இயக்குநரகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த ஏப்ரல் - ஜூலை காலகட்டத்தில் 12.29 லட்சம் டன் அளவிலான வெங்காயத்தை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. இது கடந்த ஆண்டின் அளவை விட 56 சதவிகித அதிகரிப்பு ஆகும். வெங்காய ஏற்றுமதியால் விவசாயிகளின் உற்பத்திக்கு நல்ல விலை கிடைத்தது. பிறகு பழைய சரக்குகள் தீர்ந்ததாலும், உள்நாட்டில் விலை அதிகரித்ததாலும் ஏற்றுமதி சரியத் தொடங்கிவிட்டது.

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை! ...

3 நிமிட வாசிப்பு

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

3 நிமிட வாசிப்பு

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

திங்கள் 13 நவ 2017