மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 13 நவ 2017

விசில் சின்னம்: வலுக்கும் போட்டி!?

விசில் சின்னம்: வலுக்கும் போட்டி!?

கமல், ரஜினி ஆகியோர் தாங்கள் தொடங்கப்போகும் கட்சிக்கு என்ன பெயர் வைப்பார்கள் என்ற விவாதத்தைத் தாண்டி, அவர்களின் சின்னம் என்ன என்ற விவாதத்தை மின்னம்பலம்.காம் தொடங்கி வைத்திருக்கிறது.

விசில் சின்னத்தைப் பெறுவதற்கு கமல், ரஜினி ஆகியோருக்கு இடையே நடைபெறும் போட்டியை, சிறப்புச் செய்தி: விசில் சின்னம்: கமல் - ரஜினி போட்டி’ என்ற தலைப்பில் நேற்றைய (நவம்பர் 12) மின்னம்பலத்தில் வெளியிட்டிருந்தோம்.

இந்த நிலையில் விசில் சின்னத்தைப் பெற இரு தரப்பிலும் நடக்கும் கூடுதல் முயற்சிகளும் நம் கவனத்துக்கு வந்தன.

சின்னத்தின் அடிப்படையிலான தேர்தல் நடக்கும் இந்தியாவில், மக்களுக்கு நெருக்கமான சின்னங்களை தேர்ந்தெடுப்பதில் அந்தந்த காலத்தில் போட்டி நடக்கத்தான் செய்கிறது. சின்னம் பெறுவதற்காக சில விதிமுறைகள் உள்ளன.

முதலில் கட்சியைத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டும். பின் மாநிலத்திலுள்ள தொகுதிகளில் பத்து சதவிகிதம் அல்லது அதற்கு மேல் இருக்கும் தொகுதிகளில் நிற்பதாக இருந்தால் அந்த தொகுதிகளைக் குறித்துவைத்து சின்னத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும். அதாவது தமிழகத்திலுள்ள 234 தொகுதிகளில் குறைந்தது பத்து சதவிகிதமான 24 தொகுதிகளில் நிற்பதாக விண்ணப்பித்தால் மட்டுமே பொது சின்னம் கிடைக்கும்.

அதுவும் ஒரு கட்சி கேட்ட சின்னத்தை வேறு யாரும் கேட்கவில்லை என்றால்தான் எளிதில் கிடைக்கும். இல்லையென்றால் யார் முதலில் கட்சியைப் பதிவு செய்திருக்கிறார்களோ அவர்களுக்கே சின்னம் கிடைக்கும்.

2011 தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் மெழுகுவத்தி சின்னமும், பாரிவேந்தரின் கட்சி மோதிரம் சின்னமும் பெற்று நின்றார்கள். அதேபோல் கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி மெழுவத்தி சின்னத்தைப் பெற்றது. அந்தச் சின்னத்தை அக்கட்சி தக்கவைக்க வேண்டுமென்றால் குறிப்பிட்ட சதவிகித அளவு வாக்குகளைப் பெற்றிருக்க வேண்டும். இல்லை என்றால் அந்த சின்னம் மீண்டும் பொதுவான போட்டியில் வைக்கப்படும்.

சின்னம் பெறுவதற்காக விண்ணப்பிப்பதிலும் விதிமுறைகள் இருக்கின்றன. தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலாவதற்கு அறுபது நாள்கள் முன்பிருந்துதான் சின்னத்துக்கு விண்ணப்பிக்க முடியும்.

அர்விந்த் கெஜ்ரிவால் துடைப்பம் சின்னம் கேட்டபோது உடனே கிடைத்துவிட்டது. அதுபோல தேர்தல் ஆணையத்தில் கமலுக்கோ, ரஜினிக்கோ செல்வாக்கு இருந்தால் அவர்கள் கேட்ட விசில் சின்னம் எளிதில் கிடைக்க வழி இருக்கிறது.

இப்போதைய அரசியல் சூழல்படி, விசில் சின்னம் யாருக்குக் கிடைக்க வேண்டும் என்று முடிவு செய்கிற செல்வாக்கு மத்திய ஆளுங்கட்சியான பாஜகவுக்கு நிறையவே இருக்கிறது என்கின்றனர் டெல்லி வட்டாரங்களில்.

- ஆரா

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை! ...

3 நிமிட வாசிப்பு

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

3 நிமிட வாசிப்பு

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

திங்கள் 13 நவ 2017