மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 13 நவ 2017

ஷாப்பிங் ஸ்பெஷல்: லுக்ஸ்பிக்கின் ஸ்மார்ட் கலெக்‌ஷன்!

ஷாப்பிங் ஸ்பெஷல்: லுக்ஸ்பிக்கின் ஸ்மார்ட் கலெக்‌ஷன்!

மணிக்கொடி

செலிப்ரிட்டி பெண்கள் போலவே சாமானியப் பெண்களும் ஃபேஷனில் அப்டேட்டாக இருக்க முக்கியக் காரணம், பெருகிவரும் பொட்டீக்குகள். ஹாட் ட்ரெண்ட்டை உடனுக்குடன் அறிமுகப்படுத்துவது, பிரத்யேக டிசைன்கள், கஸ்டமைஸ்டு ஆர்டர்கள் என வேகமெடுத்து வரும் இந்தத் தொழில், பெரும்பாலும் பெண்களின் கைகளில்தான் மிளிர்கிறது. அதே போல் நேரடியாக ஷாப்பிங் செய்ய கடைகளுக்குச் செல்பவர்களில் பலரும் இப்போது ஆன்லைன் ஷாப்பிங்குக்கு மாறியும் வருகிறார்கள், இந்த இரண்டையும் ஒரே நேரத்தில் தருகிறது லுக்ஸ்பிக் நிறுவனம்.

பெண்களுக்கான பிரத்யேக ஆடைகள், நகைகள், அழகு சாதனப் பொருள்கள் நேரடியாகவும் ஆன்லைன் மூலமாகவும் இங்கு கிடைக்கிறது. சென்னை அசோக்நகரில் உள்ள இதன் கிளைக்கு நாம் நேரில் சென்று பார்த்தபோது, பெண்களுக்கென ப்ரைடல், பார்ட்டிவேர், செமி ஸ்டிச்ட் என வெவ்வேறு விதமாக ஆடைகளை இங்கு காண முடிந்தது. இந்த ஆடைகள் அனைத்தும் விற்பனைக்கு மட்டுமல்லாமல் வாடகைக்கும் கிடைக்கிறது. ரூபாய் 45 முதல் 50,000 வரை இங்கு பொருள்கள் வாடகைக்கு கிடைப்பதே ஆச்சர்யத்துக்குரியது.

முக்கியமாக திருமண நிகழ்ச்சிக்கு பெண்கள் பலர் அதிகம் விரும்பும் லெகங்கா, டிசைனர் புடவைகள், சோலி, அனார்கலி என அனைத்து ரகங்களும் இங்கு கிடைக்கிறது. ஒவ்வோர் ஆடைகளும் ஒவ்வொரு முறையில் பிரத்தியேகமாகவும் வடிவமைக்கபட்டுள்ளது.

“ஒரு புது ட்ரெண்ட் உடைகள் அறிமுகமானால், அதை எவ்வளவு சீக்கிரம் நம்ம கடையில் கஸ்டமர்ஸுக்கு விற்பனைக்குக் கொடுக்கிறோம் என்பதுதான் இந்தத் தொழிலுக்கு அவசியமானது. அதேபோல் பணம் படைத்தவர்கள் மட்டுமே அணிய முடியும் என்று நினைக்கும் ஆடைகளை நாங்கள் வாடகைக்கும் தருகிறோம்” என்கிறார் இந்த கடையின் மேலாளர்.

அதேவேளையில் நேரடியாக ஷாப்பிங் செய்ய கடைகளுக்குச் செல்பவர்களில் பலரும் இன்று ஆன்லைனில் தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்குகின்றனர். எனவே லுக்ஸ்பிக்கைப் பொறுத்தவரையில் ஆன்லைன் ஷாப்பிங் முறையில் ஆடைகளுக்கும் அதன் வடிவமைப்புக்கும் ஏற்றவாறு (5000 - 50,000) வரை அதன் விலைகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சரி சரி வாங்க போய் வாங்கலாம்!

லெகங்கா மற்றும் சோலி

புது ட்ரெண்டாகத் திருமணங்களுக்கு என பிரத்தியேகமாக பெண்கள் பயன்படுத்தும் லெகங்கா மற்றும் சோலி வகைகள் சாப்ட் சில்க், காட்டன், நெட்டட் மெட்டீரியல் என அனைத்து வகைகளிலும் கிடைக்கிறது. ஸ்டோன்ஸ், சமிகிஸ், சக்கிரி, எம்பிராய்த்டு என கண்ணைப் பறிக்கும் அழகோடு மிளிர்கிறது. ரூ.5,000 முதல் ரூ.50,000 வரை இருக்கும் இதன் விலை, வாடகைக்கு ரூ.6,000 முதல் ரூ.8,000 வரை தரப்படுகிறது.

அனார்கலி

அனார்கலி சுடிதார் புது புது டிசைன்களில் வெவ்வேறு நிறங்களில் இங்கு இருக்கிறது. அதில் காட்டன், சிந்தெடிக், சில்க் காட்டன், நெட்டட் என கிடைக்கிறது, ரூ.2,000 முதல் ரூ.20,000 வரை கிடைக்கும் அனார்கலி சுடிதார்கள் 3,000 ரூபாய் வரை வாடகைக்குக் கிடைக்கிறது.

டிசைனர் ப்ளவுஸ்

புடவைகளுக்கு ஏற்ப அதன் ப்ளவுஸ்களும் வடிவைமைக்கப்படுகிறது. அந்த வகையில் எம்ப்ராய்டு, ஸ்டோன்ஸ் என பெண்களுக்கு ஏற்ற அளவுகளில் தயார்நிலையில் வைத்துள்ளனர். 1,000 முதல் 10,000 ரூபாய் வரை விற்பனைக்கு உள்ள இவை ரூ.2,000 வரை வாடகைக்கும் கிடைக்கிறது.

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை! ...

3 நிமிட வாசிப்பு

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

3 நிமிட வாசிப்பு

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

திங்கள் 13 நவ 2017