மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 13 நவ 2017

அமைதிப் பூங்காவா?: அதிர்ச்சியில் நெல்லை!

அமைதிப் பூங்காவா?: அதிர்ச்சியில் நெல்லை!

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் நடந்துமுடிந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா, நேற்று (நவம்பர் 12) நெல்லையில் நடைபெற்றது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொடங்கிய விழாவில் துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “தமிழகத்தில் தடுப்பணைகளை கட்ட அரசு ரூ.350 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மூன்றாண்டுகளில் தமிழகத்தின் பல்வேறு ஆறுகளில் தடுப்பணைகள் கட்டப்படும். தமிழகத்தில் ரூ.300 கோடி செலவில் மேலும் குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. தடுப்பணைகளில் சேமிக்கப்படும் நீர் விவசாயம், குடிநீர் தேவைக்குப் பயன்படுத்தப்படும். அரசு மீது குறை சொல்வதை மட்டுமே தொழிலாக திமுக செய்து வருகிறது” என்றார்.

மேலும் அவர், “ஆக்கபூர்வமான திட்டங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் இதுவரை பேசியது கிடையாது. குறை கூறுவோர் கூறிக்கொண்டுதான் இருப்பார்கள்; அதிலும் திமுக அதிகமாகவே குறை கூறி வருகிறது. பலரின் துணையோடு ஆட்சியைக் கலைக்க நினைத்தால் அது பகல் கனவாகத்தான் இருக்கும்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய முதல்வர், தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு அமைதிப் பூங்காவாக விளங்குகிற நாடு, தமிழ்நாடு என்பதை இந்த நேரத்திலே பெருமையோடு சொல்லிக்கொள்ள கடமைப்பட்டிருக்கின்றேன். அரசுக்கு மக்களுடைய பேராதரவு இருக்கிறது. அதன் காரணமாக, தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக விளங்கிக் கொண்டிருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

கந்துவட்டியால் ஒரே குடும்பத்தினர் தீக்குளித்து உயிரிழப்பு, வழக்கறிஞர் செம்மணி தாக்கப்பட்டதால் வழக்கறிஞர்கள் போராட்டம் என அரசுக்கு எதிராக திருநெல்வேலி மக்கள் அதிருப்தியில் உள்ள நிலையில், தமிழகம் அமைதிப் பூங்காவாக உள்ளது என்று முதலமைச்சர் கூறியுள்ளது, திருநெல்வேலி மாவட்ட மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை! ...

3 நிமிட வாசிப்பு

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

3 நிமிட வாசிப்பு

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

திங்கள் 13 நவ 2017