மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 13 நவ 2017

நிறைவடைந்த வேலைக்காரன்!

நிறைவடைந்த வேலைக்காரன்!

சிவகார்த்திகேயன், நயன்தாரா இணைந்து நடிக்கும் வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பு நேற்று (நவம்பர் 12) முடிவடைந்துள்ளது. இத்தகவலை ஆர்.ஜே.பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார்.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ள வேலைக்காரன் படத்தின் மூலம் மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில் தமிழில் அறிமுகமாகிறார். அவர் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு நண்பனாக நடிக்கிறார். மோகன் ராஜா எழுதி இயக்கும் இந்தப் படம் சமூக கருத்துகளைப் பேசுவதாகக் கூறப்படுகிறது.

சமீபத்தில் படக்குழு பாடல் காட்சிக்காக அஜ்மீர் சென்றது. படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் அங்குள்ள தர்காவுக்குச் சென்ற புகைப்படம் ஆகியவை சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. அனிருத் இசையமைத்த படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் ஸ்நேகா, பிரகாஷ்ராஜ், ரோகினி, ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

நயன்தாராவும் சிவகார்த்திகேயனும் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள இந்தப் படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. ஆயுதபூஜைக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டு, பின் தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகைக்குத் தள்ளிப்போயுள்ளது.

நயன்தாரா நடிப்பில் கோபி நயினார் இயக்கத்தில் வெள்ளி அன்று (நவம்பர் 10) வெளியான அறம் திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் வரவேற்பினால் வெற்றிப்படமாக அமைந்துள்ளது. சனிக்கிழமை (நவம்பர் 11) சென்னை, காசி திரையரங்கில் ரசிகர்களோடு படம் பார்த்த நயன்தாராவுக்கு ரசிகர்களால் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து வாழ்த்துகளைத் தெரிவித்து வருவதால் நயன்தாரா மற்றும் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை! ...

3 நிமிட வாசிப்பு

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

3 நிமிட வாசிப்பு

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

திங்கள் 13 நவ 2017