மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 13 நவ 2017

கிச்சன் கீர்த்தனா

கிச்சன் கீர்த்தனா

அடுத்த நிலை காட்டி நம்மை அழைத்துச்செல்வது ஆடைகளே... எத்தனை வேலைகள் இருந்தாலும் துணிகள் துவைப்பது அத்தியாவசியமானதுதான். ஆனால், கையாளுவது என்பது அதனினும் முக்கியமானது.

சில கையாளும் முறைகளை தெரிந்துகொள்வோம் தோழிகளே...

* துணிகளுக்கு நீலம் போடும் சமயம் சிறு முடிச்சுகளில் நீலத்தைக் கட்டி நீரில் கலந்தால் நீலம் ஒன்றுபோல் தண்ணீரில் பரவும்.

* நீலம் கலந்த நீரில் பாத்திரம், கண்ணாடி, பாட்டில் முதலியவற்றைக் கழுவினால் பளிச் என்று இருக்கும்.

* வெள்ளை நிற சட்டைகளை, நீல நிற டிஷ்யூ பேப்பரில் அல்லது நீலத் துணியில் சுற்றிவைத்தால் பழுப்பு நிறம் ஏறாமலிருக்கும்.

* பட்டுப் புடவைகளை துவைக்கும்போது பொடித்த பூந்திக் கொட்டைகளை உபயோகிக்கலாம். இறுதியில் மண்ணெண்ணெய் கலந்த நீரில் அலசி எடுத்தால் சாயம் போகாமலும் பூச்சி வெட்டாமலுமிருக்கும்.

* டீக்கரையைப் போக்க சீனியை உபயோகிக்கலாம். வெள்ளைத் துணிகளில் உள்ள கரையைப் போக்க தண்ணீரில் ப்ளீச்சிங் பவுடரைக் கரைத்து உபயோகிக்கலாம்.

* டாய்லெட் சோப் மேலுறைகளை துணி அலமாரிகளில் போட்டு வைத்தால் மணமாக இருக்கும்.

* எண்ணெய் கறையை போக்க துணியின் மேலும் கீழும் ப்ளாடிங் பேப்பரை வைத்து அயர்ன் பண்ண வேண்டும்.

* ஸ்வெட்டர் போன்றவைகளை பேப்பரில் மடித்து வைத்தால் பூச்சி வெட்டாது.

கீர்த்தனா சிந்தனைகள் :

இப்போல்லாம் லவ் எல்லாம் கல்யாணத்தில் முடியாது என்ற நம்பிக்கையில்தான் நடக்கிறது.

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை! ...

3 நிமிட வாசிப்பு

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

3 நிமிட வாசிப்பு

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

திங்கள் 13 நவ 2017