மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 13 நவ 2017

பெட்ரோலுக்கு அடிமையான குரங்கு: வீடியோ!

பெட்ரோலுக்கு அடிமையான குரங்கு: வீடியோ!

ஹரியானாவில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளின் பெட்ரோல் பைப் வழியே நேரடியாக பெட்ரோல் குடிக்கும் குரங்கின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

பொதுவாகக் குரங்குகள் வாழைப்பழம் போன்ற பழ வகைகளை உண்டு பார்த்து பழக்கப்பட்ட மனித இனத்துக்கு, பெட்ரோல் குடிக்கும் குரங்கு சற்றே ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.

ஹரியானா மாவட்டத்தின் பானிபட் என்ற பகுதியில் சுற்றித் திரியும் குரங்கு ஒன்று அங்குள்ள மோட்டார் சைக்கிள்களில் நிரப்பப்பட்டுள்ள பெட்ரோலைக் குடித்து வயிற்றை நிரப்பிக்கொள்கிறது. இதுபோன்ற ஒரு சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

இந்த வீடியோவில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் இருந்து குரங்கு ஒன்று பெட்ரோல் குடிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இதுகுறித்து பானிபட் பகுதியில் தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்தி வரும் கௌரவ் லீகா கூறுகையில், “மோட்டார் சைக்கிளின் பெட்ரோல் டியூபிலேயே வாய் வைத்து பெட்ரோலை உறிஞ்சிக் குடிக்கும் இந்தக் குரங்கு மற்ற குரங்குகளை போன்று வாழைப்பழங்களை உண்ணாது. நாங்கள் வாழைப்பழம் கொடுத்தால் அது சாப்பிட மறுத்துள்ளது.

அதிகளவு பெட்ரோல் குடிப்பதை இந்தக் குரங்கு வாடிக்கையாகக் கொண்டுள்ளது. மனிதர்கள் மதுவுக்கு அடிமையாவதைப் போன்று இந்தக் குரங்கு பெட்ரோலுக்கு அடிமையாகியுள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை! ...

3 நிமிட வாசிப்பு

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

3 நிமிட வாசிப்பு

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

திங்கள் 13 நவ 2017