மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 13 நவ 2017

கூகுள் நிறுவனத்தின் புதிய அப்ளிகேஷன்!

கூகுள் நிறுவனத்தின் புதிய அப்ளிகேஷன்!

ஸ்மார்ட்போன் பயன்பாட்டுக்கு முன்னர் பைல் டிரான்ஸ்பர் செய்ய ப்ளுடூத் முதலில் பயன்படுத்தப்பட்டது. சுமார் 5MP அளவுள்ள ஒரு பாடலை பரிமாற்றம் செய்யவும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இருந்தது. ஆனால், பைல்களை மிக விரைவாக ஒரு மொபைலில் இருந்து மற்றொன்றுக்கு அனுப்ப பல்வேறு அப்ளிகேஷன்கள் கண்டறியப்பட்டன.

அதன்படி கடந்த 2012ஆம் ஆண்டு சீனாவில் வெளியான Shareit என்ற அப்ளிகேஷன் இதுவரை பல்வேறு தரப்பு பயனர்களை ஈர்த்துள்ளது. ப்ளுடூத்தை விட சுமார் 200 மடங்கு வேகத்தில் பைல்களை டிரான்ஸ்பர் செய்ய உதவும் இந்த அப்ளிகேஷன் இலவசமாக ஆன்ட்ராய்டு பிளே-ஸ்டோரில் வழங்கப்பட்டது. அதேபோல் ஆப்பிள் நிறுவனமும் AirDrop என்ற வசதியை ஐ-போன் பயனர்களுக்கு வழங்கியுள்ளது. ஆனால் ஆண்ட்ராய்டு os-யை தயாரித்த கூகுள் நிறுவனம் இதுவரை பைல்களைப் பகிர்ந்து கொள்ள ஒரு தனி அப்ளிகேஷனை வெளியிடவில்லை.

சில தினங்களுக்கு முன்னர் பிளே-ஸ்டோரில் Files To Go என்ற பைல் டிரான்ஸ்பர் செய்யும் அப்ளிகேஷனின் பீட்டா வெர்சனை வெளியிட்டுள்ளது. இதில் பைல் டிரான்ஸ்பர் வசதி மட்டுமின்றி, மொபைல்களில் உள்ள தேவையற்ற பைல்களை நீக்கம் செய்து அதன் வேகத்தை அதிகரிக்க பயன்படுகிறது. கூகுள் நிறுவனத்தின் இந்த அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்வதற்கு 5MP மட்டுமே இடம் தேவையானது. இதன் அதிகாரபூர்வ வெளியீடு விரைவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை! ...

3 நிமிட வாசிப்பு

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

3 நிமிட வாசிப்பு

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

திங்கள் 13 நவ 2017