மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 13 நவ 2017

பியூட்டி ப்ரியா

பியூட்டி ப்ரியா

எல்லோருக்குமே வெள்ளையானதும் அழகானதுமான பற்கள் வேண்டுமென்ற ஆசை இருக்கும். பற்களை பொலிவோடு வைப்பதற்கு அனைவரும் ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறை பற்களை துலக்குவோம். இருப்பினும் ஏதாவது உணவுகளைச் சாப்பிட்டு விட்டால், பற்களில் உணவுக்கறைகள் படிந்து மற்றும் ஆங்காங்கு சிக்கிக்கொண்டு, பற்களின் நிறத்தை மஞ்சள் நிறமாக்குகின்றன.

பற்களுக்கு நன்மை தரும் உணவுகளான ஸ்ட்ராபெர்ரி, சிட்ரஸ் பழங்கள், கேரட் போன்றவற்றை சாப்பிட்டால், பற்கள் வெண்மையுடன் இருக்கும்.

தற்போது பற்களின் அழகிலும் மக்கள் அதிக அக்கறை காட்டுகிறார்கள். பற்கள் எடுப்பாக இருந்தாலோ, வரிசை சீரற்ற வகையில் இருந்தாலோ, அதிக இடைவெளி மற்றும் பெரிய பற்களோடு இருந்தாலோ அதை இளம் வயதிலே சீர் செய்ய முன்வருகிறார்கள். அதனால் வசீகரமான முக அழகைப் பெறுகிறார்கள். செயற்கை பற்களை இப்போது பலரும் பயன்படுத்த தொடங்கியிருக்கிறார்கள். அதில் ஐந்து முறைகள் உள்ளன. அவை: கிரவுண், பிரிட்ஜ், இம்பிளாண்ட், பார்ஷியல் செட், புல் செட். அவற்றில் கிரவுண், பிரிட்ஜ், இம்பிளாண்ட் போன்றவை பற்களை நிரந்தரமாக வைக்கும் முறையாகும். பார்ஷியல் செட், புல் செட் போன்றவை எடுத்து மாற்றும் விதத்திலானவை.

செயற்கை பற்கள் சிர்கோணியம், செராமிக், அக்ரிலிக், மெட்டல் போன்றவற்றில் உருவாக்கப்படுகிறது.

பற்கள் அழகாக தோன்ற வேண்டும் என்பதற்காக தங்கத்தில் பற்களை பொருத்திக்கொள்வது ஏற்புடையதல்ல.

அனைவருக்குமே உப்பு, பற்களை வெள்ளையாக்கும் பொருள்களில் மிகவும் சிறந்தது. இவற்றை வைத்து பற்களை துலக்கினால் பற்களை வெள்ளையாக மட்டும் மாறாமல், பளிச்சென்றும் மின்னும்.

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: ஐஆர்சிடிசி-யில் பணி!

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை! ...

3 நிமிட வாசிப்பு

அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை!

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

3 நிமிட வாசிப்பு

சூரிய சக்தி மின்சாரம்: 40% வரை மானியம்!

திங்கள் 13 நவ 2017