மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஜூலை 2017

டிஜிட்டல் திண்ணை: கேரக்டரை புரிஞ்சுக்கவே முடியலயே!

டிஜிட்டல் திண்ணை: கேரக்டரை புரிஞ்சுக்கவே முடியலயே!

மொபைலில் டேட்டா ஆன் செய்தோம். தயாராக வைத்திருந்த ஸ்டேட்டஸ்க்கு போஸ்ட் கொடுத்தது ஃபேஸ்புக்.

"திமுகவின் சட்டப்பேரவை நடவடிக்கைகள் தொடர்ந்து விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. அதிமுகவுக்கு சாதமாக திமுக செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திமுகவினரை அதிமுக எம்.எல்.ஏக்கள் புகழ்வதும், அதிமுக அமைச்சர்களை திமுக எம்.எல்.ஏக்கள் புகழ்வதும் கடந்த சில தினங்களில் வெளிப்படையாக பார்க்க முடிந்தது. ' என்ன செய்ய சொல்றீங்க... எம்.ஜி.ஆர். இருந்தபோது சட்டசபை நடந்தது ஒரு மாதிரி. தலைவர் கலைஞர் இருந்தபோது எல்லோரையும் பேச விடுவார். அந்தம்மா முதல்வராக இருந்தபோது எந்த கேள்வி கேட்டாலும் பதில் வரும். அவங்களே பதிலும் சொல்வாங்க. பன்னீரும் கொஞ்சம் சிரிச்சுக்குவார், கொஞ்சம் கோபப்படுவார். ஆனால், இப்போ இருக்காரே முதல்வர் பழனிசாமி... அவரை புரிஞ்சுக்கவே முடியலையே... எதைக் கேட்டாலும் எந்த ரியாக்‌ஷனும் காட்டாமல் முகத்தை வெச்சிருக்காரு. சி.எம்.கிட்ட இருந்து ஏதாவது உருப்படியா பதில் வந்தால்தானே நாம அடுத்த விஷயத்தை பேச முடியும். எத்தனை முறை வெளிநடப்பு செய்யுறது? திமுக உள்ளே போறதே வெளிநடப்பு செய்யத்தான் என மக்கள் பேசுறாங்க. அதனால நாங்க உள்ளே இருந்துதானே ஆகணும். மக்களுக்கு விரோதமான எந்த விஷயமாக இருந்தாலும் நாங்க குரல் கொடுத்துட்டுதான் இருக்கோம். அதுக்காக சட்டமன்றத்தை நடத்தவே விடாமலா செய்ய முடியும்? நம்பிக்கை கோரும் தீர்மானத்துல கலாட்டா நடந்தது. எல்லாரும் திமுகவைதான் திட்டினீங்க… இப்ப அமைதியா பேசினா ஆக்டிவ்வா இல்லைங்குறீங்க. என்னதான் செய்யறது?

மானிய கோரிக்கையின் போது எங்களுக்கு அதை கொடுத்தாங்க... இதை கொடுத்தாங்க என்று சொல்லிட்டு இருக்காங்க. மானிய கோரிக்கை சமயத்தில் அந்தந்த துறை சார்ந்த அமைச்சர்கள் சாப்பாடு போடுவதும், பரிசுகள் கொடுப்பதும் காலம் காலமாக நடப்பது தான். அதை பெரிதுபடுத்த தேவை இல்ல. ஸ்டாலினும் சபையில எந்த பிரச்னையும் வந்துடக் கூடாதுன்னு, அடிக்கடி சொல்லிக்கிட்டுதான் இருக்காரு. மத்தபடி நாங்க எங்க தனித்தன்மையை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டோம்...' என்று சொன்னார் திமுகவில் உள்ள சீனியர் எம்.எல்.ஏ. ஒருவர்.

இதையெல்லாம் ஸ்டாலினிடம் சொல்லி இருக்கிறார்கள். ' சொல்றவங்க சொல்லிட்டு போகட்டும். யாரு சொல்றாங்கன்னு எனக்கு தெரியும். அதுக்கெல்லாம் பதில் சொல்ல தேவை இல்லை!' என சொல்லிவிட்டாராம். " என்று முடிந்த ஸ்டேட்டஸ்க்கு லைக் போட்டதுடன் ஷேர் செய்தது வாட்ஸ் அப்.

தொடர்ந்து மெசேஜ் ஒன்றை டைப்பிங் செய்ய ஆரம்பித்தது வாட்ஸ் அப்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 14 ஜூலை 2017