மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஜூலை 2017

அரசு விருது : நடிகர்கள் மகிழ்ச்சி!

அரசு விருது : நடிகர்கள் மகிழ்ச்சி!

தமிழக அரசு சிறந்த தமிழ்த் திரைப்படங்கள், நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக்கலைஞர்கள் ஆகியோருக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி கௌரவித்து வருகிறது. ஆனால் 2009ம் ஆண்டிலிருந்து இந்த விருதுகள் வழங்கப்படாமல் இருந்தன. இந்நிலையில் 2009 லிருந்து 2014 வரை ஆறு ஆண்டுகளுக்கான திரைப்பட விருதுகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று (ஜூலை 13) அறிவித்தார். இதற்கு பல்வேறு கலைஞர்களும் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

2011-ம் ஆண்டு வெளியான 'கும்கி' படத்துக்கு சிறந்த படம் (சிறப்பு பரிசு), சிறந்த நடிகை, சிறந்த நடிகர் (சிறப்பு பரிசு), சிறந்த இசையமைப்பாளர், சிறந்த பின்னணிப் பாடகர், சிறந்த பின்னணிப் பாடகி, சிறந்த ஒளிப்பதிவாளர் என 7 விருதுகள் கிடைத்துள்ளது. இதனால் படக்குழு பெரும் மகிழ்ச்சியில் உள்ளது. இதற்கு விக்ரம் பிரபு தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று (ஜூலை 14) தனது டிவிட்டர் பக்கத்தில், "கும்கி படத்தில் பணியாற்றியவர்களுக்காக 7 விருதுகள் கிடைத்துள்ளது. நானும் அதில் பங்கேற்றதை நினைத்து பெருமைப்படுகிறேன். எங்களை கௌரவப்படுத்திய தமிழக அரசுக்கு நன்றி. தொடர்ந்து ஒத்துழைப்பு அளித்துவரும் அனைவருக்கும் என் அன்பு'' என்று குறிபிட்டுள்ளார்.

2011ஆம் வருடத்திற்கான சிறந்த நடிகர் விருதுபெற்றுள்ள நடிகர் விமலும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இதுபற்றி அவர், “2009ஆம் வருடத்தின் சிறந்த படமாக ‘பசங்க’ படமும், 2010ஆம் வருடத்தின் இரண்டாவது சிறந்த படமாக ‘களவாணி’ படமும் 2011ஆம் வருடத்தின் சிறந்த படமாக ‘வாகை சூடவா’ படமும் சிறந்த படங்களுக்கான விருதுகளை பெற்றிருக்கின்றன. மேலும் 2014ஆம் வருடத்திற்கான சிறந்த இயக்குனருக்கான விருது ‘மஞ்சப்பை’ பட இயக்குனர் ராகவனுக்கு வழங்கப்பட்டுள்ளது. எனது திரையுலக வாழ்க்கையில் மிக முக்கியமான இந்த நான்கு படங்களிலும் நானும் ஒரு அங்கமாக இருந்திருக்கிறேன் என்பதை நினைத்து மகிழ்ச்சியுடன் பெருமையும் அடைகிறேன்.

மேலும் ‘வாகை சூடவா’ படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான விருது எனக்கு வழங்கப்பட்டுள்ளது எனது மகிழ்ச்சியையும் எனது பொறுப்பையும் இன்னும் அதிகரித்துள்ளது. இன்னும் நல்ல படைப்புகளில் கவனம் செலுத்தவேண்டும் என்கிற ஊக்கத்தை இந்த விருது எனக்கு ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முழு காரணமான எனது இயக்குநர்களான பாண்டிராஜ், சற்குணம் மற்றும் ராகவன் ஆகியோருக்கு எனது நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். மற்றும் விருதுபெற்ற சக கலைஞர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 14 ஜூலை 2017