மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஜூலை 2017

கீழடிக்கு செங்கோட்டையன் ஒரு கோடி!

கீழடியில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் பழங்காலப் பொருட்களைப் பாதுகாப்பதற்கு காட்சிக்கூடம் அமைக்கத் தமிழக அரசு சார்பில் ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

தமிழர்களின் 25௦௦ ஆண்டுகள் பழமையான நாகரிகத்தைப் பறை சாற்றும் விதமாக கீழடி அகழ்வாராய்ச்சியில் சான்றுகள் கிடைத்துள்ளன. இதில், 5000க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால், கண்டுபிடிக்கப்பட்ட தொல்லியல் பொருட்கள் பாதுகாப்பின்றி உள்ளன.

இந்நிலையில், ஜூலை 14-ஆம் தேதி(இன்று) நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் கீழடி அகழாய்வின் போது கண்டெடுக்கப்பட்ட தொல் பொருட்களை வைத்து அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்று சட்டசபையில் உறுப்பினர் மாரியப்பன் கென்னடி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

இதற்குப் பதிலளித்து அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், “மத்திய தொல்லியல் துறை சிவகங்கை மாவட்டம் கீழடியில் 2014-15 ல் பிப்ரவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை 2015-16ல் ஜனவரி முதல் ஆகஸ்டு வரை 2 ஏக்கர் பரப்பளவில் அகழாய்வு செய்தது. இதில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கட்டிட பகுதிகள் கழிவு நீர் குழாய்கள், சுடு மண்ணால் ஆன உறைக் கிணறு, பானை ஓடுகள் , கண்காணிப்பு பணிகளில் வெளிப்பட்டன. 5,925 தொல் பொருட்களும் கண்டெடுக்கப்பட்டன.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 14 ஜூலை 2017