மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஜூலை 2017

என்மீது குறி!

என்மீது குறி!

சிறையில் சசிகலாவுக்கு சலுகை வழங்கப்பட்டதாகவும், அதற்கு 2 கோடி ரூபாய் வரை லஞ்சம் பெறப்பட்டதாகவும் வெளியான சம்பவத்தைத் தொடர்ந்து இதை விசாரிக்க மூத்த கர்நாடக உள்துறை அதிகாரி வினய் குமார் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.

சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இந்த நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு சிறைத்துறை டிஐஜியாக பொறுப்பேற்ற ரூபா நடத்திய ஆய்வில், சிறையில் சட்டவிரோதமாக பிடி, கஞ்சா உள்ளிட்டவை லஞ்சம் பெற்றுக்கொண்டு விநியோகிக்கப்படுவதாகவும், சிறையிலுள்ள சசிகலாவுக்கு தனி சமையலறை, அவருக்கு உணவு தயாரித்துக் கொடுக்க தனியாக சில பெண் கைதிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும். மேலும் இதற்காக சிறைத்துறை டிஐஜி சத்தியநாராயண ராவ் 2 கோடி வரை லஞ்சம் பெற்றதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். ஆனால் இதை சிறைத்துறை டிஐஜி மறுத்து வந்தார். இதற்கிடையே நேற்று இதுகுறித்த விரிவான விசாரணைக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டிருந்தார். குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த சூழ்நிலையில், இதுதொடர்பாக விசாரணை நடத்திட புதிதாக விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து இன்று ஜூலை 14ஆம் தேதி கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,' சசிகலாவுக்கு சிறையில் சலுகை வழங்கப்பட்டது தொடர்பான விசாரணை குழு மூத்த உள்துறை அதிகாரி வினய் குமார் ஐஏஎஸ் தலைமையில் செயல்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் பரப்பன அக்ரஹார சிறையில் சென்று ஆய்வு செய்து ஒரு வாரத்தில் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய வினய்குமாருக்கு சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். ஒரு மாத காலத்தில் இறுதி அறிக்கை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த சூழ்நிலையில் பெங்களூருவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சிறைத்துறை டிஐஜி ரூபா,'சசிகலா விவகாரத்தில் என் மீது குறிவைப்பது நியாயமற்றது, சசிகலாவுக்கு சிறையில் வழங்கிய சலுகை குறித்த என்னுடைய அறிக்கையில் நான் உறுதியாக உள்ளேன்.இந்த குற்றச்சாட்டு விவகாரத்தால் எனக்கு எவ்வகையிலும் லாபம் இல்லை. சசிகலா விவகாரம் தொடர்பாக டிஜிபியிடம் நான் அளித்த அறிக்கை குறித்து ஊடகங்களிடம் நான் எதுவும் கூறவில்லை. என் மீது தவறு இருந்தால் அதற்கான எந்த விசாரணைக்கும் தயாராக உள்ளேன். சசிகலா அறையில் டிவி,மின் விசிறி இருந்த படக்காட்சிகள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. என்று தெரிவித்துள்ளார்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 14 ஜூலை 2017