மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஜூலை 2017

வாழ்வா சாவா ஆட்டம் :மிதாலி ராஜ்

வாழ்வா சாவா ஆட்டம் :மிதாலி ராஜ்

இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் பெண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் கடந்த ஜூலை 12ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

முதலில் பேட் செய்த இந்திய அணி 226 ரன்களைச் சேர்த்தது. இதில் பூனம் ரவுத் (106 ரன்), கேப்டன் மிதாலி ராஜ் (69 ரன், 114 பந்து) ஆகியோர் சிறப்பாக விளையாடினர். 227 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 45.1 ஓவரில் 2 விக்கெட்களை மட்டுமே இழந்து வெற்றிபெற்றது. இந்த தோல்வியினால் அரையிறுதி வாய்ப்பை இந்திய அணி உறுதி செய்யமுடியாமல் போனது.

இதுவரை 4 வெற்றி, 2 தோல்வியுடன் உள்ள இந்திய அணி தனது கடைசி லீக்கில் நாளை (ஜூலை 15) நியூசிலாந்துடன் மோதுகிறது. இதில் ஜெயித்தால் அரையிறுதியை எட்டலாம். தோற்றால் வெளியேற வேண்டியது தான் என்ற நிலையில் களமிறங்குகிறது இந்திய அணி. உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணிக்கு எதிராக இதுவரை 11 ஆட்டங்களில் விளையாடி உள்ள இந்திய அணி அதில் ஒன்றில் மட்டுமே (2005-ம் ஆண்டு) வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வி கண்ட பிறகு இந்திய கேப்டன் மிதாலி ராஜ் செய்தியாளர்களிடம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தோல்வியடைந்ததைப் பற்றி பேசிய பிறகு நியூசிலாந்துக்கு எதிரான கடைசி லீக் ஆட்டம் எங்களுக்கு வாழ்வா-சாவா போன்றது. அரையிறுதிக்கு தகுதி பெற வேண்டும் என்றால், எங்களது மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தோல்வியில் இருந்து மீண்டு வர முடியும் என்பதை நிரூபித்துள்ளன. உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்றால் இத்தகைய சரிவில் இருந்து எழுச்சி பெற வேண்டியது அவசியமாகும். ஒவ்வொரு அணிகளும் இதைத்தான் செய்ய முயற்சிக்கின்றன. ஒரு ஆட்டத்தில் தோற்றதும் நம்பிக்கையை இழந்து விடக்கூடாது. ஆனால் முக்கியமான ஆட்டத்தை எதிர்கொள்ளும் போது நாம் எப்போதும் இத்தகைய பிரச்சினையை சந்தித்து இருக்கிறோம். எனவே வீராங்கனைகள் பொறுப்பை உணர்ந்து விளையாட வேண்டும்என்று கூறினார்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 14 ஜூலை 2017