மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஜூலை 2017

இரும்பு பெண் திருமணம் : எதிராகப் புகார்!

இரும்பு பெண் திருமணம் : எதிராகப் புகார்!

இரோம் ‌ஷர்மிளா தனது நீண்ட கால காதலரான டெஸ்ட்மான்ட் கெடின்கோவை திருமணம் செய்ய முடிவு செய்துள்ள நிலையில், அவரது திருமணத்திற்கு எதிராகச் சமூக ஆர்வலர் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.

தனது சொந்த மக்களையே எந்தக் கேள்வி கூட கேட்காமல் சுட்டுக் கொல்லும் அதிகாரத்துக்குப் பெயர்தான் ஆயுதப் படை சிறப்பு அதிகார சட்டம் ராணுவத்தின் The Armed Forces (Special Powers) Act, or AFSPA எனப்படுவது. இந்தச் சட்டம் இந்தியாவில் மணிப்பூர் உள்பட சில மாநிலங்களில் நடைமுறையில் இருக்கிறது. யார் மீதாவது சந்தேகம் எழுந்தால்... ஏன்... என்னவென்று விசாரிக்காமல் யாரை வேண்டுமானாலும் சுடலாம். அதன் பின்விளைவுகளை பற்றி ராணுவம் கவலைப்படாது.

மணிப்பூரைச் சேர்ந்த இரும்பு பெண்மணியான இரோம் சானு ‌ஷர்மிளா, அத்தகைய சர்ச்சைக்குரிய ஆயுதப் படை சிறப்பு அதிகார சட்டத்துக்கு எதிராக 16 ஆண்டுகளாக, கடந்த 2000-ஆம் ஆண்டு நவம்பர் 2ஆம் தேதியில் இருந்து 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை அவர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார். இதற்கிடையில், கடந்த 2009ஆம் ஆண்டு இரோம்‌ ஷர்மிளாவை பற்றி பர்னிங் பிரிட்ஜ் என்ற புத்தகம் வெளியானது. அதைப்படித்த இங்கிலாந்தைச் சேர்ந்த டெஸ்ட்மான்ட் கெடின்கோ அவரது போராட்டத்தால் ஈர்க்கப்பட்டு, 2011ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியா வந்தபோது, இம்பாலில் இரோம் ‌ஷர்மிளாவை முதல் முறையாகச் சந்தித்தார். அவர்களது நட்பு காதலாக மாறியது.

இந்நிலையில், 2016ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதி, திடீரென தான் உண்ணாவிரதத்தைக் கைவிட்டு அரசியலில் குதித்து ஆயுதப்படையினரின் சிறப்பு அதிகாரத்தை நீக்கப்போவதாகவும், மணிப்பூர் மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் சர்மிளா அறிவித்தார். அதையடுத்து, மணிப்பூர் போலீசார் சர்மிளாவை, 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி மணிப்பூர் நகர மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி விடுதலை செய்யப்பட்டதையடுத்து அவர் முறைப்படி தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். அதன் பின்னர், மணிப்பூர் சட்டசபை தேர்தலில் இரோம் ‌ஷர்மிளா தனிக்கட்சி தொடங்கி முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான இபோபி சிங்குக்கு எதிராகப் போட்டியிட்டு வெறும் 90 ஓட்டுகளே பெற்று படுதோல்வி அடைந்தார். அதனால் இரோம் ‌ஷர்மிளா கடும் அதிருப்தி அடைந்தார்.

அதையடுத்து, தமிழகத்தின் கொடைக்கானலுக்கு வந்த இரோம் ‌ஷர்மிளா தனது நீண்ட கால காதலரான டெஸ்ட்மான்ட் கெடின்கோவை ஜூலை கடைசி வாரத்தில் பதிவு திருமணம் செய்வதற்கு முடிவு செய்து கடந்த ஜூலை 12ஆம் தேதி கொடைக்கானலில் தனது திருமணத்திற்கான ஆவணங்களை இரோம் தாக்கல் செய்தார். திருமணத்துக்குப் பிறகு அவர் தமிழ்நாட்டிலேயே குடியேறத் திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இரோம் ‌ஷர்மிளாவின் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கொடைக்கானலைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மகேந்திரன் என்பவர் நேற்று ஜூலை 13ஆம் தேதி கொடைக்கானல் சார்-பதிவாளர் அலுவலகத்தில் இரோம் ‌ஷர்மிளாவின் திருமணத்திற்கு அரசு அனுமதி கொடுக்கக் கூடாது என்று புகார் மனு கொடுத்துள்ளார். இதுகுறித்து, மகேந்திரன் தி இந்து செய்தியாளரிடம் கூறுகையில், கொடைக்கானலில் பெருமாள் மலை அருகே பொதி செந்தோ பகுதிக்கு மிகப் பிரபலமான இரோம் ‌ஷர்மிளா வருகை புரிந்தபோது நான் அவரை நேரில் சந்தித்தேன். அப்போது, கொடைக்கானலில் தாம் அமைதியான வாழ்க்கையை வாழவிரும்புவதாக அவர் கூறியதை நான் வரவேற்றேன்.

மேலும்,.இரோம் ‌ஷர்மிளா தொலைக்காட்சி ஒன்றுக்கு சமீபத்தில் பேட்டியளிக்கையில், பழங்குடி மக்களுக்கு தாம் ஆதரவளிக்கப்போவதாகக் கூறினார்.தொடர்ந்து அவரது காதலர் குறித்தும் கூறினார். ஆனால், அவரது காதலர் டெஸ்ட்மான்ட் கெடின்கோ-வால் கொடைக்கானல் மலைப்பகுதிக்கு அச்சுறுத்தலும், அமைதியின்மையும் ஏற்படும். மேலும், இருவரும் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால், சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் 30 நாள் கால அவகாசத்துக்கு முன்பாக அவர்கள் திருமணம் செய்வதற்கு அனுமதி கொடுக்கக் கூடாது என்று அவர் கூறினார்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 14 ஜூலை 2017