மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஜூலை 2017

பெற்றோர் டார்ச்சர்: சிறுவன் தற்கொலை!

பெற்றோர் டார்ச்சர்:  சிறுவன் தற்கொலை!

ஐஐடி கோச்சிங் சென்டரில் சேரச் சொல்லி பெற்றோர்கள் வற்புறுத்தியதால் 11 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெற்றோர்கள் தங்களின் ஆசையை நிறைவேற்றி கொள்வதற்காக அவர்களுடைய ஆசையை தங்கள் பிள்ளைகள் மீது திணிக்கின்றனர். இதனால் குழந்தைகளின் கனவு நிறைவேறாமல் போகின்றது. குழந்தைகள் ஒரு துறையை தேர்வு செய்தால் அவர்களுக்கு எதிராக ஒரு துறையை தேர்ந்தெடுத்துப் படிக்கவைகின்றனர். இதனால் படிக்க ஆர்வம் இல்லாமல் படித்தும் அதற்கு வேலையும் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். இதில் சில சமயம் தற்கொலைகளும் ஏற்படுகிறது. தற்போது ஒரு படி முன்னே சென்று பள்ளி வகுப்பிலே நீ இதைத்தான் படிக்க வேண்டும் என்று கட்டாய படுத்துகின்றனர். பள்ளி படிப்புகள் முடிப்பதற்கு முன்னே கல்லூரியில் இடம் பிடிப்பதற்காக கோச்சிங் சென்டர்களுக்கு அனுப்புகின்றனர். அவ்வாறு தெலங்கானவை சேர்ந்த 11 வயது சிறுவன் தனது பெற்றோர் ஐஐடி கோச்சிங் சென்டரில் வற்புறுத்தியதாகக் கூறி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா கரிம்நகர் மாவட்டத்தில் சித்தார்த்தா உயர்நிலைப்பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வந்த குர்ராம் ஸ்ரீகர் ரெட்டி என்ற மாணவன் தனது பெற்றோர் கொடுத்த அழுத்தத்தால் பள்ளியின் இரண்டாம் மாடியில் இருந்து கீழே விழுந்து நேற்று ஜூலை-13 ஆம் தேதி காலைத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

வழக்கம் போல் நேற்று பள்ளிக்கு சென்ற ஸ்ரீகர், அவரது நண்பர்களுடன் சேர்ந்து, கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் உள்ள தனது வகுப்பறைக்குச் சென்றுள்ளார். ஆனால் வகுப்பறையில் இருந்து திடீரென்று வெளியே வந்து மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். பின் உடனடியாக ஒரு உள்ளூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிறுவன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். என்று கரிம்நகர் டவுன் காவல்துறை ஆய்வாளர் ஸ்ரீனிவாச ராவ் கூறினார்.

பெடப்பள்ளி மாவட்டத்தின் தர்மராம் தொகுதியில் உள்ள கோலாப்பள்ளி கிராமத்தில் வசித்து வரும் ஷாதிதார் ரெட்டி மற்றும் சாரதா தம்பதியினரின் ஒரே மகன் ஸ்ரீகர். அவர்கள் தங்கள் மகனுக்குச் சிறந்த கல்வியைக் கொடுக்க விரும்பியுள்ளனர்.

இதுகுறித்து ஷாதிதார் காவல்துறையிடம் கூறியதாவது,” ஸ்ரீகர் நன்கு படிக்கக் கூடிய ஒரு மாணவன். அவன் எதிர்காலத்தில் ஒரு நல்ல பொறியாளராக வேண்டும் என விரும்பி ஐஐடி கோச்சிங் சென்டரில் சேர்ந்து படிக்க வேண்டும் என்று விரும்பினோம் என்று கூறியுள்ளார். மேலும் பள்ளி நிர்வாகத்தின் கவனக்குறைவு காரணமாகத் தான் ஸ்ரீகர் தற்கொலை செய்து கொண்டதாக ஆரம்பத்தில் பெற்றோர்கள் கூறினர். ஆனால் காவல்துறை விசாரணையில் அவர்களின் மகன் மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது. ஸ்ரீகர் இதே வாரத்தில் தெலங்கானாவில் தற்கொலை செய்து கொண்ட இரண்டாவது மாணவன் ஆவார். முன்னதாக ஜீதிமட்லாவில் உள்ள சிறுபான்மையினர் நலன்புரி பள்ளியில் தனது விடுதி அறையில் 12 வயதான முஸ்லீம் சிறுவன் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 14 ஜூலை 2017