மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஜூலை 2017

இலங்கை மீனவர்களே காரணம்: சிங்கள தளபதி!

இலங்கை மீனவர்களே காரணம்: சிங்கள தளபதி!

தமிழக மீனவர்கள் இலங்கையின் வடக்கு கடற்கரை பகுதிகளில், அத்துமீறி மீன்பிடிப்பதற்கு இலங்கை மீனவர்களே காரணம் என்று இலங்கையின் ராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயகா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஆழ்கடலில் மீன் பிடிப்பதற்காக கச்சத்தீவு அருகே சென்று மீன் பிடித்து வருகின்றனர். சில நேரங்களில் கச்சத்தீவுக்கு செல்லும்போது இலங்கை கடற்கரையின் வடக்குப் பகுதிக்குள் சென்று விடுகின்றனர். இதுகுறித்து, இரதரப்பு மீனவர்களுக்கும் மட்டுமன்றி இந்திய, இலங்கை நாடுகளுக்கும் பெரும் பிரச்னையாக கடந்த 50 ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது.

அதிலும் குறிப்பாக, இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் நடந்த உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் இருந்து கச்சத்தீவு அருகே சென்றாலே தமிழக மீனவர்களின் படகுகளுக்கு சேதம் விளைவித்தும், மீனவர்களின் உடமைகளை பறிமுதல் செய்து விரட்டியடிப்பதும், படகுகளுடன் சேர்த்து தமிழக மீனவர்களை கைது செய்வது போன்ற அராஜகங்களை சிங்கள ராணுவத்தினர் செய்து வருகின்றனர்.

அதையடுத்து, இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, வெளிக்கடை மற்றும் நெடுந்தீவு போன்ற பகுதிகளில் சிறைவைக்கப்படும் தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்ககோரி பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதி கோரிக்கை விடுப்பதன் பேரில், இந்திய வெளியுறவுத் துறையினர் இலங்கை அரசிடம் தமிழக மீனவர்களை விடுதலை செய்யும்படி கேட்பதும் தொடர் வாடிக்கையாக இருந்து வருகிறது.

மேலும், இருதரப்பு மீனவர்களின் பிரச்னை தொடர்பாக, இரு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும், அதிகாரிகளும் 3 அல்லது 6 மாதங்களுக்கு ஒருமுறை டெல்லியிலோ அல்லது கொலும்புவிலோ கூடிப்பேசி தீர்வு காணப்படாமலே வெறும் சம்பிரதாய பேச்சாக மட்டுமே நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இலங்கையின் வடக்கு கடற்கரை பிரதேசத்தில் தமிழக மீனவர்கள் அத்துமீறி மீன்பிடிப்பதற்கு, இலங்கை மீனவர்களே காரணம் என்று இலங்கையின் ராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயகா தெரிவித்துள்ளார். கொழும்புவில் நேற்று ஜூலை 13ஆம் தேதி நடைபெற்ற விழாவின்போது லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயகா பேசுகையில், இலங்கையின் வடக்கு பகுதி மீனவர்கள் மீனவர்கள் மீன்பிடி தொழிலை நிறுத்திக் கொண்ட காரணத்தினாலேயே தமிழக மீனவர்கள் வடபகுதி கடலை ஆக்கிரமிக்கின்றனர் என்று கூறினார்.

வடக்கில் தற்போது மிகவும் குறைந்தளவிலான மீனவர்களே மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதாகவும், அவர்கள் ஆழ்கடலுக்குச் செல்லாமல், வலை வீசி மீன்பிடிப்பவர்களாகவும் உள்ளதால்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார். கடந்த காலங்களில், இலங்கையின் வடக்குப் பகுதியிலிருந்து மீன்களை ஏற்றிக்கொண்டு நாள்தோறும் 100-க்கும் மேற்பட்ட லாரிகள் தென் பகுதி இலங்கைக்கு செல்லும். ஆனால், தற்போது அந்தளவுக்கு இல்லாமல், பத்தில் ஒரு பங்காக மிகவும் குறைந்த லாரிகளிலேயே செல்வதாக அவர் தெரிவித்தார். மேலும், இலங்கையின் தென் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மட்டுமே கடலுக்குச் சென்று பல நாட்களாக மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். வடக்குப் பகுதி மீனவர்கள், கடலுக்குச் சென்று மீன் பிடிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை. அதனால், இலங்கையில் வடக்குப் பகுதி கடற்கரையில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க வருகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 14 ஜூலை 2017