மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஜூலை 2017

கல்லூரியில் செல்பேசிக்கு தடை!

கல்லூரியில் செல்பேசிக்கு தடை!

ஆண்ட்ராய்டு போன் வருகையை அடுத்து இளைஞர்கள் காலையில் விழிப்பதே செல்போனில்தான், அந்தளவுக்குப் போனுக்கும், அவர்களுக்கும் நெருங்கிய தொடர்புள்ளது. செல்போன் இல்லாமல் அவர்களால் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது. குறிப்பாக, ஃபேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்கள் இல்லாமல் பொழுதை கழிக்க முடியாது. இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஒரு கல்லூரியில் செல்போன் கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் மொரதாபாத் நகரில் உள்ள மஹாராஜா ஹரிஷ் சந்திர பி.ஜி. கல்லூரியில் மாணவர்கள் கல்லூரி வளாகத்திற்குள் செல்போன்களை பயன்படுத்துவதைத் தடை செய்யுமாறு அறிவித்துள்ளது. மேலும், தடையை மீறி செல்போன் பயன்படுத்தும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கல்லூரி முதல்வர், விஷேஷ் குப்தா கூறுகையில், மாணவர்களை படிப்பிலிருந்து திசை திருப்புவதில் செல்போன் முக்கிய பங்கு வகிக்கிறது. மாணவர்கள் அதிகளவில் சமூக வலைதளங்களில் ஈடுபாடு கொண்டுள்ளனர். மேலும், ஆண்கள் தொடர்ந்து செல்போனில் பெண்களிடம் பேசுகின்றனர். மாணவர்களிடம் ஒழுக்கத்தை வளர்ப்பதற்காக, செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், புதிதாகக் கல்லூரிக்கு வரும் மாணவர்களுக்கு, செல்போன் தடை குறித்து அறிவுறுத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

கல்லூரி மாணவர்களிடமிருந்து மன முதிர்ச்சியை எதிர்பார்க்கிறோம். அதற்காக, ஏதேனும் தடை செய்வது தீர்வு அல்ல, என ரம்ஜாஸ் பள்ளியின் வரலாறு ஆசிரியர், ரேணு குப்தா தெரிவித்துள்ளார்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 14 ஜூலை 2017