மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஜூலை 2017

வாரியத்தலைவர் : கிடப்பில் போட்ட ஆளுநர்!

வாரியத்தலைவர் : கிடப்பில் போட்ட ஆளுநர்!

புதுச்சேரியில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.-க்கள் மற்றும் கூட்டணி கட்சியான திமுக எம்.எல்.ஏ.-க்கள் மற்றும் கட்சி பிரமுகர்கள் பலர் வாரியத்தலைவர் பதவி வகித்து வந்தார்கள். மூன்று ஆண்டுகளாக இருந்த வாரியத்தலைவர் பதவிக் காலத்தை, துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பொறுப்பேற்றதும், வாரியத் தலைவர் பதவிக்காலத்தை ஒரு ஆண்டாகக் குறைத்து உத்தரவிட்டார்.

தொடர்ந்து, அந்தப் பதவியில் மேலும் நீடிக்க வேண்டும் என்றால், துணைநிலை ஆளுநரிடம் புதுப்பிக்க வேண்டும் என்ற உத்தரவையும் கிரண்பேடி பிறப்பித்தார். இந்நிலையில், வாரியத் தலைவர்களின் பதவிக்காலம் கடந்த ஜூலை 7ஆம் தேதியுடன் முடிவடைந்தது. வாரியத் தலைவர் பதவியைப் புதுப்பிக்க வேண்டி துணைநிலை ஆளுநருக்கு கடந்த ஒருமாதத்திற்கு முன்பே அனுப்பிய பைலையும் அவர் கிடப்பில் போட்டு விட்டார்.

அதையடுத்து, வாரியத் தலைவராக இருந்தவர்கள் கடந்த சிலநாட்களாக அலுவலகத்தின் பக்கமே போவதில்லையாம். இன்று ஜூலை 14ஆம் தேதி நேனாங்குப்பம் படகுத்துறையில் 2 புதிய டூரிஸ்ட் படகுகளை விடுவதற்கு, சுற்றுலா வளர்ச்சி கழக வாரியத்தலைவர் பாலனை அழைத்துள்ளார்கள் அதிகாரிகள். ஆனால், எனக்கு வாரியத்தலைவர் பதவிக்காலம் முடிந்ததால், வேறுயாரையாவது வைத்து விழாவை நடத்துங்கள் என்று மனமுடைந்து பாலன் கூறியதால் விழாவை ரத்து செய்துள்ளார்கள் அதிகாரிகள்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 14 ஜூலை 2017