மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஜூலை 2017

அரசு மீது நம்பிக்கை: இந்தியா எந்த இடம்?

அரசு மீது நம்பிக்கை: இந்தியா எந்த இடம்?

பொதுவாக இந்தியாவில் மத நம்பிக்கை அதிகம் என்று கூறுவார்கள். ஆனால், பிரபல நாளிதழான ஃபோர்ப்ஸ் பத்திரிகையில் வெளியிட்டுள்ள செய்தியில், இந்திய மக்கள் தங்களை ஆளும் அரசு மீது அதிகம் நம்பிக்கை வைத்திருக்கும் நாடுகளில் முதலிடம் பெற்றுள்ளது.

ஒவ்வொரு நாட்டிலும் மக்கள் தங்களை ஆளும் அரசு மீது எந்தளவுக்கு நம்பிக்கை வைத்துள்ளனர் என்பதை தெரிந்துகொள்ள சர்வதேச பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு ஒரு ஆய்வை மேற்கொண்டது. அந்த ஆய்வு முடிவானது பிரபல நாளிதழான ஃபோர்ப்ஸ் பத்திரிகையில் Government at a Glance 2017 என்ற தலைப்பில் வெளியானது. அதில், பிரதமர் மோடி அரசு மீது 73 சதவிகித இந்தியர்கள் நம்பிக்கை வைத்துள்ளார்கள். இது உலகிலேயே மிக உயர்ந்த எண்ணிக்கையாகும்.

அதற்கடுத்தபடியாக, கனடாவில் 62 சதவிகித மக்கள் தங்கள் அரசு மீது நம்பிக்கை வைத்து இரண்டாம் இடத்தில் உள்ளது. இதைத் தொடர்ந்து, துருக்கி மற்றும் ரஷ்யா 58 சதவிகிதத்துடன் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்திலும், ஜெர்மனி 55 சதவிகிதத்துடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளன. தென் ஆப்பிரிக்கா 48 சதவிகிதத்துடன் ஆறாவது இடத்திலும், ஆஸ்திரேலியா 45 சதவிகிதத்துடன் ஏழாவது இடத்திலும், இங்கிலாந்து 41 சதவிகிதத்துடன் எட்டாவது இடத்திலும், ஜப்பான் 36 சதவிகிதத்துடன் ஒன்பதாவது இடத்திலும் உள்ளன. இந்தப் பட்டியலில் அமெரிக்கா 30 சதவிகிதத்துடன் பத்தாவது இடத்தில் உள்ளது. 13 சதவீதத்துடன் கிரீஸ் கடைசி இடம் பிடித்துள்ளது.

மக்கள் தங்கள் அரசாங்கத்தை நிலையான மற்றும் நம்பகத்தன்மையென கருதுகிறார்களா இல்லையா அரசு அதன் குடிமக்களை ஆபத்தில் இருந்து பாதுகாக்க மற்றும் திறம்பட பொதுச் சேவைகளை வழங்க முடியுமா என்பதை உலகிற்கு காட்டவே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 14 ஜூலை 2017