மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஜூலை 2017

பிக் பாஸ் புகழ் ஓவியாவாகிய நான்! :அப்டேட்குமாரு

பிக் பாஸ் புகழ் ஓவியாவாகிய நான்! :அப்டேட்குமாரு

ஆனாலும் நம்ம சின்ன டாக்டர் நிலைமை இந்த அளவுக்கு போயிருக்கக்கூடாதுங்க. யாருன்னா கேட்டீங்க? நம்ம அன்புமணியை தாங்க சொல்றேன். போன எலெக்‌ஷ்ன்ல, நான் தான் அடுத்த சி.எம்.ன்னு சொல்லி ஒவ்வொரு மேடையிலேயும் பவர்பாயிண்ட் பிரசண்டேஷனோட கிளாஸ் எடுத்தார்ல அவர் தாங்க. கலைஞர், ஜெயலலிதாவை விட நான் தான் பெரிய ஆள்ன்னு பக்கம் பக்கமா விளம்பரம் குடுத்தவரு, கொஞ்ச நாளைக்கு முன்னால பாகுபலி-2 படத்தை குடும்பத்தோட போய் பார்த்துருக்காரு. அப்ப ‘அமரேந்திர பாகுபலியாகிய நான்..’னு பிரபாஸ் சொல்ல ஒட்டுமொத்த கூட்டமும் கைதட்டி ரசிச்சுருக்கு. அதை பார்த்த அன்புமணியோட மனைவி “ஏங்க..வண்டலூர் மாநாட்டுல அன்புமணியாகிய நான்..னு நீங்க சொன்னப்ப இதே மாதிரி தான மக்கள் கைதட்டி ரசிச்சாங்க’ன்னு பழச ஞாபகபடுத்திவிட்ருக்காங்க. பாவம் மனுஷனுக்கு முகத்துல அருளே இல்ல. அதையே இப்ப தான் கொஞ்சம் கொஞ்சமா மறந்துட்டு நார்மலானவரை பிக்பாஸ் ஓவியா சீண்டிப் பார்த்துருக்கு. பிக்பாஸ்ல ஓவியாவுக்கு போட்ட ஒன்றரை கோடி ஓட்டை எனக்கு போட்ருந்தீங்கன்னா நான் சி.எம் ஆகியிருப்பேன்னு மறுபடியும் பெருமூச்சு விடுறாரு. சரி, அவர் தான் தெரியாம சொல்லிட்டாருன்னா இந்த மீம் கிரியேட்டர்ஸாவது கொஞ்சம் பொறுத்து போயிருக்கலாம். ஒரு மனுசன் சிக்கிட்டாங்கிறதுக்காக இப்படியாய்யா வச்சு செய்றது. பாவம் விடுங்கப்பா.

@கருப்பு கருணா

இரட்டை இலை சின்னத்திற்காக லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தினகரனுக்கு எதிராக ஆதாரம் இல்லை - டெல்லி குற்றப்பிரிவு காவல்துறை

செட்டிலாயிட்டிருக்கும்...ஓவர்..ஓவர்..

@SKtwtz

இப்போலாம் ஸ்கூல்ல பசங்க சத்தமில்லாம முத்தம் கொடுப்பதா செய்தி.

நான் படிக்கும் போதெல்லாம் கிளாஸ்ல சத்தமில்லாம முறுக்கு திங்கவே கஷ்டப்பட்டேன்.

@palanikannan04

கமல் படத்தை வெளியிடும் திரையரங்கம் அடித்து நொறுக்கப்படும்-இந்து மக்கள் கட்சி

பேச்சுலதான் வயலென்ஸ்,

மத்தபடி பிரியாணி அண்டாவ பாத்தா சைலண்ட்ஸ்

@HAJAMYDEENNKS

இன்னும் ஃபேஸ்புக்,ட்விட்டர்,வாட்ஸ்அப்களில் மட்டும்தான் ஆதார் கார்டை இணைக்க வேண்டியிருக்கிறது...!

@கருப்பு கருணா

நீட் தேர்வை நடத்தி மருத்துவ இடங்களை புத்திசாலித்தனமாக அபகரித்துக்கொண்டதை போல...

நீட் கவர்மெண்டுன்னு ஒன்னு அறிவிச்சி தமிழ்நாட்டையும் எடுத்துக்கிட்டு போங்கப்பா...

@naatupurathan

ஆறிலும் சாவு, நூறிலும் சாவு எனும் சொற்றொடருக்கான ஒரு எளிய உதாரணம்.,

"முட்டை"யுடன் கூடிய "கோழி"பிரியாணி...!!!

@Sandy_Offfl

டூத்பேஸ்ட் ல வேம்பு, லவங்கம், உப்பு, எலுமிச்சை, நிலக்கரி னு சேத்திக்கிட்டே போறானுங்க

இதெல்லா பல் தேய்க்கவா, இல்லே ஹோமம் நடத்தவா னு தெரியல

@abuthahir707

அரசுமீது அதிக நம்பிக்கைகொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம் -செய்தி

புழுகலாம் அதுக்குனு "அண்டப்"புழுகு புழுகக்கூடாது

@palanikannan04

ஆசிரியர்: டேய் ரமேஷ் ABCD சொல்லு

ரமேஷ்: ABCDEF GST UVWXYZ

ஆசிரியர்:எங்கடா பாதி எழுத்த காணோம்?

ரமேஷ்: GST ல பிடித்தம்போக இவ்வளவுதான் சார்

@WritterRamesh

சுந்தரபாண்டியன் ல விஜய்சேதுபதி க்கு லட்சுமிமேனன் கிடைக்கலைன்னாலும் சிறந்த வில்லன் அவார்ட் கிடைச்சுருக்கு

வாழ்த்துக்கள் 💐💐

@amuduarattai

"ஏன் வீட்டுப்பாடம் எழுதிட்டு வரல" ஸ்கூலில் மிஸ்.

"ஏன்பா வீட்டுப் பாடம் எழுதித்தரல" வீட்டில் பையன்.

@palanikannan04

இந்தியா முன்னேற அனைவரும் வரிகட்ட வேண்டும் -அருண் ஜெட்லி

நல்ல வேளை, "நாடு முன்னேற அனைவரும் கோமியம்" குடிக்கணும்னு சொல்லல..

@HAJAMYDEENNKS

தமிழ்நாட்டில் குறுகிய நாட்களில் பிரபலமடைந்த ஒரு குரல்

"எல்லாத்துக்கும் அந்த பரணி பயதான் காரணம் " ...!

@HAJAMYDEENNKS

கோபத்தை வெளிக்காட்ட வாட்ஸ்அப் குரூப்பிலிருந்து வெளிநடப்பு செய்வதே போதுமானதாக இருக்கிறது...!

@Guru_Nila

ஒருநாள் நமக்கு பிடிச்சமாறி வாழ்க்கை மாறும்

அப்போ நம்ம ஆசையும் மாறி போய்யிருக்கும்

@WritterRamesh

ஓவியா காலைல எழுந்ததுமே

எங்க எப்டி இருக்கோ

அங்க அப்டியே ஒரு குத்து குத்தும் பாருங்க

அதுக்காகத்தான் கோடிகணக்குல ஓட்டு குத்துறோம்

Mrஅன்புமணி

@நக்கல் மன்னன் 2.0

பிரதமர் நரேந்திர மோடி இன்னொரு மகாத்மா காந்தி - மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா

சர்மா ஜி

அப்ப கோட்சே யாரு

@kunnathurarumug

இந்தியா முன்னேற அனைவரும் வரிகட்ட வேண்டும்~அருண் ஜெட்லி

இவரே 14000கோடி வரி ஏய்ப்பு கேஸ்ல வோடோபோனுக்கு ஆதரவா ஆஜராவாராம், இவரே வரி கட்டனும்பாராம்

@BoopatyMurugesh

நமீதாவே "யார் தச்சே சட்டே, என் தாத்தா தச்சே சட்டே"ன்னு தமிழ்ல பாடிட்டுருக்கு.. இவிங்களுக்கு AR ரஹ்மான் இந்தில பாடனுமாம்..

@Karunanidhi RV

அப்படியே ஜாதகத்தையும் ஆதார் கார்டு கூட சேத்துட்டா சௌகரியமா இருக்கும்.

@MoideenKadhar

தமிழ்நாட்டில் பாஜக முதல்நிலை கட்சியாக உருவெடுக்கும் - பொன்னார்.

நீங்க உருவெடுக்குறதுக்குள்ள எங்க உயிர எடுத்துடுவீங்க போல 😩😩😩 !!

@joseph_offcl

ஒன்றரை கோடி ஓட்டு வாங்கினார் ஓவியா -செய்தி

1.5 கோடி மக்கள் என் பக்கம், இரட்டை இலை மற்றும் அதிமுக எனக்கே சொந்தம் -#ஓவியா

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 14 ஜூலை 2017