மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஜூலை 2017

தமிழகத்துக்கு கடைசி இடம் !

தமிழகத்துக்கு கடைசி இடம் !

இந்தியாவில் தொழில் தொடங்க உகந்த மாநிலங்கள் பட்டியலில் தமிழகத்திற்கு கடைசி இடம் பிடித்துள்ளதாகவும், இதுகுறித்து தலைமை செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்து இன்று ஜூலை 14 ஆம் தேதி சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்,' இன்று சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் முதலமைச்சர், ஏற்கனவே நடைபெற்று வரும் பணிகளை ஏதோ புதிய அறிவிப்புகளைப் போல அறிவித்து வந்தார். மானியக் கோரிக்கையின் போது எழுப்பப்படும் கேள்விகளும் அதற்கு அமைச்சர்கள் அளிக்கும் பதில்களும், கேள்வி நேரங்களில் அறிவிக்கப்படும் திட்டங்களும், உறுதிமொழிகளும் உறுதிமொழி குழுவுக்கு அனுப்பப்படும். அதுபோன்று இனி 110 விதியின் கீழ் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களால் வெளியிடப்படும் அறிவிப்புகளும், உறுதிமொழிக் குழுவுக்கு அனுப்ப வேண்டுமெனவும்,இதுகுறித்து சட்டமன்றத்தில் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தேன். ஆனால் என்னுடைய கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. முதலமைச்சரும் இதற்கான தெளிவான பதிலை தெரிவிக்கவில்லை.

இந்த வருடம் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு நடைபெறுமா என்று மாணவர்கள் குழப்பத்தில் இருந்து வருகின்றனர். மருத்துவ மாணவர்கள் சேர்க்கை விவகாரத்தில் மாணவர்களை தமிழக அரசு காவு வாங்கியுள்ளது. அவர்களுக்கு மன்னிக்க முடியாத குற்றத்தை இழைத்துள்ளது என்று தெரிவித்தார்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 14 ஜூலை 2017