மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஜூலை 2017

ஜல்லிக்கட்டு கலவரம் : கூடுதல் அவகாசம் கேட்பு!

ஜல்லிக்கட்டு கலவரம் : கூடுதல் அவகாசம் கேட்பு!

ஜல்லிக்கட்டு கலவரம் குறித்து விசாரணை நடத்தக் கூடுதலாக நான்கு மாத கால அவகாசம் வேண்டும் என்று ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் கேட்டுள்ளார்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு நிரந்தரச் சட்டம் கொண்டுவரவேண்டும் என்றும், பீட்டா அமைப்பை எதிர்த்தும் கடந்த ஜனவரி மாதம் 17 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை போராட்டம் நடைபெற்றது. இளைஞர்கள் முகநூல் மூலம் இணைந்து போராட்டம் நடத்தினர். பின், இதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டனர். இதையடுத்து குழந்தைகள், பெண்கள் என அனைவரும் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தி வெற்றி பெற்றனர். ஒரு வரலாறு மிக்க போராட்டமாக பேசப்பட்டது. ஆனால் அமைதியுடன் அறவழியில் நடந்த இந்தப் போராட்டம் இறுதி நாளன்று கலவரத்தில் முடிவடைந்தது.

கடந்த ஜனவரி-23 ஆம் தேதி நடந்த ஆர்ப்பாட்டத்தில் காவல்துறையினரே ஆட்டோ, கார், குடிசை போன்றவற்றுக்கு தீ வைத்து எரிப்பதும், இளைஞர்களை வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்வதும் போன்ற வீடியோ காட்சிகள் வைரலாகப் பரவி வந்தது. இந்நிலையில், கலவரம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தலைமையில் விசாரணை நடத்த முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அறிவித்தார். இந்தக் குழு கலவரம் குறித்து தமிழகம் முழுவதும் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். இதற்கிடையே, ஜல்லிக்கட்டு கலவரம் குறித்து சிபிஐ விசாரணை மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் 9 வழக்குகள் தொடரப்பட்டன.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 14 ஜூலை 2017