மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஜூலை 2017

சாலைப்பணி : பாரத்மாலா திட்டத்துக்கு ஒப்புதல்!

சாலைப்பணி : பாரத்மாலா திட்டத்துக்கு ஒப்புதல்!

மத்திய அரசின் கனவுத் திட்டமான ’பாரத்மாலா’ திட்டத்துக்கு பொது முதலீட்டு வாரியம் (PIB) ஒப்புதல் அளித்துள்ளது. இன்னும் மத்திய அமைச்சரவையின் இறுதிக்கட்ட ஒப்புதல் மட்டும் கிடைத்துவிட்டால் சாலையமைக்கும் பணி தொடங்கிவிடும்.

இந்தியாவின் மிகப்பெரிய சாலையமைப்புத் திட்டமான இந்த பாரத்மாலா திட்டத்தில் கடற்கரைச் சாலைகள், எக்ஸ்பிரஸ்வே ஆகியவை உட்பட சுமார் 51,000 கிலோ மீட்டர் தூர சாலையமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், முதற்கட்டமாக ரூ.5.5 லட்சம் கோடி செலவில் 29,000 கிலோ மீட்டர் அளவிலான சாலையமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த 1998ஆம் ஆண்டில் அப்போதைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயால் தொடங்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டமானது இவ்வாண்டு இறுதிக்குள் நிறைவுபெற உள்ளது. எனவே, இத்திட்டத்தைத் தொடர்ந்து பாரத்மாலா திட்டத்தில் நெடுஞ்சாலை அமைக்க இப்போதைய மோடி அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு மொத்தமாக ரூ.10 லட்சம் கோடி முதலீடு செய்யப்படுகிறது.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 14 ஜூலை 2017