மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஜூலை 2017

இதயம் இரும்பு உடம்பு கரும்பு!

இதயம் இரும்பு உடம்பு கரும்பு!

ஜூலை 14-ஆம் தேதி இன்று நடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் சபாநாயகர் தனபாலைப் பாராட்டி அதிமுக எம்.எல்.ஏ. கவிதை பாடினார்.

ஜூலை 14-ஆம் தேதி(இன்று) நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் கேள்வி பதில் நேரத்தின் போது பரமக்குடி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. எஸ்.முத்தையா தனது தொகுதி குறித்து கேள்வியைக் கேட்பதற்கு முன் சபாநாயகர் தனபாலைப் பாராட்டி கவிதையைப் பாடினார். சபாநாயகர் தனபால் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுபதிக்கப்பட்டு,தற்போது குணமடைந்து வந்ததை நினைவு கூர்ந்து எம்.எல்.ஏ. கவிதையைப் பாடினார்.

“உங்கள் இதயம் இரும்பு ஆனால் உடம்பு கரும்பு

அதனால் தான் எறும்புகள் உங்களை உரசுவதும்,

உட்காருவதுமாக வேடிக்கை செய்ய

நீங்கள் அந்த எறும்புகளை ஊதி விடுவதும்,

உதிர்த்து விடுவதுமாக வாடிக்கை செய்ய

உங்கள் உடலும், உள்ளமும், நலமாக

பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்” இவ்வாறு அவர் பாடினார்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 14 ஜூலை 2017