மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஜூலை 2017

10 இடங்களுக்குத் தேர்தல்!

10 இடங்களுக்குத் தேர்தல்!

நாடாளுமன்ற மாநிலங்களவையின் 10 உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் 18 ஆம் தேதியுடன் முடிவடைவதையொட்டி ஆகஸ்ட் 8ஆம் தேதி காலியாகவுள்ள இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர் ஸ்ருமிதி ராணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாரம் யெச்சூரி, சோனியாவின் அரசியல் ஆலோசகர் அகமது பட்டேல் ஆகிய முக்கிய தலைவர்கள் உள்பட மேற்கு வங்கம், குஜராத், உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 9 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஆகஸ்ட் மாதம் 18 ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளது. மேலும் சுற்றுசூழல்துறை அமைச்சர் அனில் தாவே மறைந்ததால் அவருடைய உறுப்பினர் பதவியும் காலியாக உள்ளது.

இதற்கு முன்பே கடந்த ஜூன் 07 ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் என்று மே 18 ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது.ஆனால் ஜூலை 17 ஆம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறும் என்ற அறிவிப்பால், மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் காலியாகவுள்ள 10 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கும் வரும் ஆகஸ்ட் 8 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் இன்று ஜூலை 14ஆம் தேதி அறிவித்துள்ளது.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 14 ஜூலை 2017