மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஜூலை 2017

'லேடீஸ் ஸ்பெஷல்' ரயில் நிலையம்!

'லேடீஸ் ஸ்பெஷல்' ரயில் நிலையம்!

பெண்களால் எதையும் செய்ய முடியும் என்பதை காட்டுவதற்காக ஆண்களுக்கு இணையாக அனைத்து இடங்களிலும் வேலை செய்கின்றனர். மேலும், தங்களுக்கென்று ஒரு இடத்தை உருவாக்கி கொள்கின்றனர். இந்திய ரயில்வே பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில், ஒரு அதிரடியான திட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்,மும்பையில் உள்ள மாதுங்கா ரயில்வே நிலையம் முழுவதும் பெண்களே பணிபுரியும் நாட்டின் முதல் 'லேடீஸ் ஸ்பெஷல்' ரயில் நிலையம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

மும்பை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள மாதுங்கா, ரயில் நிலையத்தில் தற்போது அனைத்தும் டிக்கெட் ஊழியர்கள், பாதுகாப்பு ஊழியர், ஏன் ஸ்டேஷன் மாஸ்டர் கூட பெண்கள்தான். இதற்கு முன்பு, இந்த பணிகளில் ஆண்கள்தான் பணிபுரிந்து வந்தனர். இந்த மாதுங்கா ரயில் நிலையம் தற்போது ‘பெண்கள் ரயில் நிலையம்’ ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், புதிதாக அனைத்துப் பதவிகளுக்கும், பணிகளுக்கும் பெண் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

1992 ஆம் ஆண்டில் மத்திய ரயில்வேயில் சேர்ந்தபோது மும்பை பிரிவில் முதல் பெண் நிலைய மாஸ்டர் ஆன மம்தா குல்கர்னி கூறுகையில், எங்களுடைய அனுபவம் ஒரு மாய மந்திரம் போல் இருக்கிறது. என்னுடைய 25 ஆண்டு கால பணி அனுபவத்தில் எல்லாமே பெண்கள் பணிபுரியும் இடத்தில் பணியாற்றுவேன் என்று நான் நினைத்து பார்க்கவில்லை. நாங்கள் ஒரு குடும்பத்தை போலவே செயல்படுகிறோம். பொறுப்பு மற்றும் ஒத்துழைப்புடன் பணிபுரிகிறோம். ஆரம்பத்தில் சில பிரச்சனைகளை எதிர்கொண்டோம். வாழ்க்கையின் ஒரு பகுதியாக எங்களது பணியை பார்க்க ஆரம்பித்து விட்ட பிறகு , அந்த பிரச்சனை பெரியதாக தெரியவில்லை என தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு வாரங்களுக்குப் பிறகு, 11 புக்கிங் கிளார்க், 5 RPF ஊழியர்கள், 7 டிக்கெட் செக்கர்ஸ் என மொத்தம், 30 பெண் ஊழியர்கள் ரயில்வே மேலாளர் மம்தா குல்கர்னி மேற்பார்வையில் பணிபுரிந்து வருகின்றனர் என ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 14 ஜூலை 2017