மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஜூலை 2017

சட்டமன்றத்தில் உறுப்பினர் இருக்கையில் வெடிபொருள்!

சட்டமன்றத்தில் உறுப்பினர் இருக்கையில்  வெடிபொருள்!

உத்திரப்பிரதேச சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த செவ்வாய் கிழமை முதல் தொடங்கி நடைபெறும் நிலையில்… நேற்று வியாழக் கிழமை சட்டமன்றத்தில் சமாஜ்வாதி உறுப்பினர் மனோஜ் பாண்டேவின் இருக்கைக்கு கீழே 150 கிராம் அளவுள்ள ஒரு பவுடர் பாக்கெட் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் அந்த பவுடர் சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டதில், அது சக்தி வாய்ந்த பிளாஸ்டிக் வெடிமருந்து என்று கண்டறியப்பட்டுள்ளது. பெண்ட்டா எரித்ரிடோல் டெட்ரா நைட்ரேட் என்ற வெடிமருந்துதான் அது என்று முதல் கட்டமாக தெரியவந்துள்ளது.

சட்டமன்றத் தொடர் நடந்துவரும் நிலையில்… சட்டமன்ற உறுப்பினர்கள் 403 பேர் மற்றும் அதிகாரிகள், அலுவலர்கள், ஊழியர்கள், பாதுகாவலர்கள் என்று சுமார் 600 பேருக்கு மேல் பணியாற்றி வருகின்றனர். இந்த நேரத்தில் சட்ட மன்றத்தில் வெடிமருந்து கைப்பற்றப்பட்டது அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.

இதுபற்றி இன்று சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் ஆதித்யநாத் யோகி, ‘’இதுபோன்ற போக்கை நாம் அனுமதிக்கலாமா 403 சட்டமன்ற உறுப்பினர்களுடைய பாதுகாப்பும், இங்கு பணிபுரியும் அத்தனை அதிகாரிகளின் பாதுகாப்பும் சமரசம் செய்து கொள்ள முடியாத ஒன்று. இது சட்டமன்றத்தின் பாதுகாப்புக்கு விடப்பட்ட சவால். இதற்குப் பின்னால் இருப்பவர்கள் யார் என்பதை கண்டறிந்து தண்டிப்போம். என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு முகவாண்மை அமைப்பு இதுபற்றி விசாரணை நடத்தும்’’ என்று அறிவித்துள்ளார்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 14 ஜூலை 2017