மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஜூலை 2017

மளிகைக் கடைகளில் நீடிக்கும் குழப்பம்!

மளிகைக் கடைகளில் நீடிக்கும் குழப்பம்!

ஜூலை 1ஆம் தேதி முதல் ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி-க்கு ஏற்ப பொருட்களின் விலையை உற்பத்தியாளர்கள் திருத்தியமைக்க வேண்டும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் பழைய விலை அச்சிடப்பட்டுள்ள பொருட்களை செப்டம்பர் மாதத்துக்குள் விற்றுத் தீர்க்கவும் அரசு கால அவகாசம் அளித்துள்ளது.

ஜி.எஸ்.டி-க்கு ஏற்ப உற்பத்தியாளர்கள் தங்களின் தயாரிப்புகளின் விலையைத் திருத்தியமைப்பதால், பொருள் விநியோகத்தில் தாமதம் ஏற்படுகிறது. இதனால் ஜூலை மாதம் முதல் மளிகைக் கடைகளில் விற்பனை சரிந்துள்ளது. ஜூன் 30ஆம் தேதிக்குள் அனைத்துப் பழைய சரக்குகளையும் விற்றுத் தீர்க்க வியாபாரிகள் முயன்றனர். ஆனாலும் பொருட்கள் விற்பனையாகவில்லை.

உணவு விற்பனை நிலையங்கள், மளிகைக் கடைகள், எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனையாளர்கள் தங்களின் இருப்பில் பாதியைக்கூட நிரப்ப முடியாத நிலையில் உள்ளனர். ஜி.எஸ்.டி-யால் ஏற்பட்ட குழப்பங்களால் வியாபாரிகளுக்கு இத்தகைய பிரச்னைகள் எழுந்துள்ளன. “இரண்டு அல்லது மூன்று வாரங்களில் இயல்பு நிலை திரும்பிவிடும்” என்று ஃபியூச்சர் குரூப் நிறுவனத்தின் தலைவர் கிஷோர் பியானி தெரிவித்துள்ளார்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 14 ஜூலை 2017