மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஜூலை 2017

கைவிட்டது மைக்ரோசாப்ட் : பயனர்கள் அதிர்ச்சி!

கைவிட்டது மைக்ரோசாப்ட் : பயனர்கள் அதிர்ச்சி!

பிரபல OS-களில் ஒன்றான விண்டோஸை தயாரிக்கும் நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மொபைல்களில் அதன் சொந்த OSகளை பயன்படுத்தியதால் பெரும்பாலான பயனர்களின் வரவேற்பை பெறமுடியவில்லை. ஆனால் குறிப்பிட்ட சில பயனர்கள் மட்டும் அவர்களின் வசதிக்கு ஏற்றார்போல் மைக்ரோசாப்ட் நிறுவத்தின் சில மாடல்களை பயன்படுத்தி வந்தனர். அதன்படி விண்டோஸ் 8.1 OS கொண்டு இயங்கும் ஸ்மார்ட்போன்களுக்கான அப்டேட் அதிகாரப்பூர்வமாக நிறுத்திக் கொள்வதாக அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மைக்ரோசாப்ட் பிரபல OSகளில் ஒன்றான விண்டோஸ் 8.1 பெரும்பாலான சாதனங்களில் தற்போது இயங்கி வருகிறது.

அதன்படி, சுமார் 80 சதவிகிதம் விண்டோஸ் போன்களில் விண்டோஸ் 8.1 OS தான் செயல்பட்டு வருகிறது. இனி எவ்வித அப்டேட், செக்யூரிட்டி பேட்ச், பக் ஃபிக்ஸ் போன்றவை விண்டோஸ் போன் இயங்குதளத்திற்கு வழங்கப்படமாட்டாது என மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் லூமியா 1520, 930, 830 மற்றும் 735 ஆகிய மாடல்களில் விண்டோஸ் 8.1 OS-யைத் தொடர்ந்து விண்டோஸ் 10 அப்டேட் வழங்கப்படும் என மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்தது. ஆனால் அந்த அப்டேட்கள் இனி வழங்கப்படமாட்டாது என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இதேபோன்று விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் 7 OS-களுக்கான அப்டேட்கள் முறையே ஜனவரி 2016 மற்றும் அக்டோபர் 2014-ம் ஆண்டுகளில் நிறுத்தப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளில் பெரும்பாலான விண்டோஸ் OS மொபைல்களில் வாட்ஸ்அப் சேவை நிறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் OS அப்டேட்களும் நிறுத்தப்பட்டுள்ளது பயனர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள்ளது.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 14 ஜூலை 2017