மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஜூலை 2017

மருத்துவ படிப்பு அரசாணை ரத்து!

மருத்துவ படிப்பு அரசாணை ரத்து!

மருத்துவ படிப்பில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85% உள் இட ஒதுக்கீடு அரசாணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீட் தேர்வு எழுதிய தமிழக மாணவர்களில், 38 சதவிகித மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். முதல் 25 இடங்களைக் கூட பிடிக்காத நிலையில் மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு 85 சதவிகிதமும், சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு 15 சதவிகித இடமும் ஒதுக்கப்படும் என்ற அரசாணையைக் கடந்த ஜூன்-22 ஆம் தேதி தமிழக அரசு வெளியிட்டது. தமிழக அரசின் அரசாணையின் படி சிபிஎஸ்இ மாணவர்களுக்கு ஏறக்குறைய 300 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்படுகிறது. எனவே இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்திலும் தஞ்சாவூரை சேர்ந்த தார்னிஷ்குமார் உள்ளிட்ட சிபிஎஸ்இ மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர். அந்த மனுவில் இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளைப் பின்பற்றாமல் புதிய இட ஒதுக்கீடு முறையை நடைமுறைப்படுத்தத் தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று தெரிவித்திருந்தனர்.

ஆனால் இந்த வழக்கைக் கடந்த ஜூலை-7 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் முடித்துவைத்து உத்தரவிட்டது. மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் இதில் உச்சநீதிமன்றம் தலையிட முடியாது, என்றும், இதுகுறித்த தீர்வுக்கு உயர்நீதிமன்றத்தையே அணுகும்படி தெரிவித்தது.

இந்த வழக்கு இன்று ஜூலை-14 ஆம் தேதி நீதிபதி ரவிச்சந்திரபாபு அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, மருத்துவப் படிப்பில், மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு 85 சதவிகித உள் இட ஒதுக்கீடு அளித்த, தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், புதிய தர வரிசை பட்டியல் தயார் செய்து, அதனடிப்படையில் கலந்தாய்வை நடத்த வேண்டும் என்றும் இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளுக்கு எதிராக மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தக் கூடாது என்றும் தெரிவித்தார். மேலும் ஏற்கனவே உள்ள இட ஒதுக்கீடு அடிப்படையில் கலந்தாய்வை நடத்த வேண்டும். எனவும் உத்தரவிட்டுள்ளார்.

இதனால் மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கு தயாராகாத தமிழக அரசு பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மாநில பாடத்திட்ட மாணவர்களும், தமிழக சுகாதாரத்துறையும் மேல்முறையீடு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் 85 சதவிகித இட ஒதுக்கீடு உறுதியாக மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு வழங்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் மணப்பெண் - உக்ரைனில் மாப்பிள்ளை: ஆன்லைனில் நடந்த திருமணம்! ...

3 நிமிட வாசிப்பு

கேரளாவில் மணப்பெண் - உக்ரைனில் மாப்பிள்ளை: ஆன்லைனில் நடந்த திருமணம்!

காட்டாறு வெள்ளத்தில் சிக்கிய தாய் குழந்தை: பதற வைக்கும் வீடியோ! ...

6 நிமிட வாசிப்பு

காட்டாறு வெள்ளத்தில் சிக்கிய தாய் குழந்தை: பதற வைக்கும் வீடியோ!

கரூர் ஆட்சியரை பாராட்டிய தலைமைச் செயலாளர்!

4 நிமிட வாசிப்பு

கரூர் ஆட்சியரை பாராட்டிய தலைமைச் செயலாளர்!

வெள்ளி 14 ஜூலை 2017