மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஜூலை 2017

அம்மா உணவகங்கள்?

அம்மா உணவகங்கள்?

சென்னையில் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களின் எண்ணிக்கையைக் குறைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஏழைகளுக்குக் குறைந்த விலையில் தரமான உணவு கிடைக்கும் வகையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2013 மார்ச் 19ம் நாள் சென்னை சாந்தோமில் அம்மா உணவகத்தைத் தொடங்கிவைத்தார்.

இத்திட்டத்தால் பலரும் பயனடைந்து வரும் நிலையில் அம்மா உணவகங்களின் எண்ணிக்கையைக் குறைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. உணவகத்தின் கட்டமைப்பிற்கான நிலுவைத் தொகை ரூ 700 கோடி அதன் ஒப்பந்ததாரர்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை. இதனால் அம்மா உணவகங்களின் எண்ணிக்கையை 407ல் இருந்து 200 ஆக குறைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

அதேவேளையில் உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளதால் அம்மா உணவகங்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் நடவடிக்கை கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் ஆளுங்கட்சி கருதுகிறது. அம்மா உணவகத்தில் தினமும் ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 12 ஆயிரம் வரை விற்பனை நடைபெறுகிறது. ஆனால் அரிசி, காய்கறிகள் வாங்குவது போன்றவற்றுக்கு ஒரு நாளைக்கு ரூ. 20 ஆயிரம் வரை செலவாகிறது. அம்மா உணவகத்தில் பணியாற்றுவோருக்கு ஒருநாள் சம்பளமாக ரூ.300 வழங்கப்படுகிறது. அம்மா உணவகங்களில் உணவகங்களின் அமைவிடத்தை பொறுத்து 10 முதல் 40 பேர் வரை வேலை செய்கின்றனர்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 14 ஜூலை 2017