மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஜூலை 2017

ஓவியாவுக்கு விழுந்த ஓட்டு எனக்கு விழுந்திருந்தால்!

ஓவியாவுக்கு விழுந்த ஓட்டு எனக்கு விழுந்திருந்தால்!

தனியார் தொலைகாட்சி நிறுவனத்தில் பங்கேற்றிருக்கும் நடிகை ஓவியாவிற்கு அளித்த வாக்குகளை எனக்கு அளித்திருந்தால் தமிழகத்தைக் காப்பாற்றியிருப்பேன் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

நெடுஞ்சாலையோரம் உள்ள மதுக்கடைகளை சட்டப்போராட்டம் மூலம் மூட வைத்ததாக பாமக நிறுவனர் ராமதாசுக்கு அரியலூரில் பாராட்டு விழா ஜூலை 13-ஆம் தேதி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அன்புமணி ராமதாஸ் பேசுகையில், “சிஸ்டம் சரியில்லை என்று தற்போது கூறும் ரஜினி ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போது ஏன் கூறவில்லை? கருணாநிதியுடன் ஒரே மேடையில் ஒன்றாக இருக்கும் போது சிஸ்டம் சரியில்லை என்று கூறியிருந்தால் இன்னும் சரியாக இருந்திருக்கும்.

ஜல்லிக்கட்டுக்கு எதிராகப் போராடியது போல் இளைஞர்கள் வேலையில்லா திண்டாட்டத்திற்கு எதிராகவும் போராட வேண்டும். தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் நடிகை ஓவியாவிற்கு 1:50 கோடி ஓட்டுகள் வாக்களித்து காப்பாற்றியுள்ளார்கள். வாக்களித்தவர்களுக்கு மானமில்லையா? அந்த 1:50 கோடி ஓட்டுகளை போன தேர்தலில் எனக்கு வாக்களித்திருந்தால் தமிழகத்தை தற்போது காப்பாற்றியிருப்பேன். முதல்வராகும் ஆசை எனக்கு இல்லை, மக்களைக் காப்பதே எனது நோக்கம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 14 ஜூலை 2017