மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஜூலை 2017

ஜூலை-17ல் பொறியியல் கலந்தாய்வு!

ஜூலை-17ல் பொறியியல் கலந்தாய்வு!

தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு ஜூலை-17 ஆம் தேதி தொடங்கும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.

தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான சுமார் 2 .77லட்சம் இடங்கள் ஒற்றைச்சாளர முறையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. இதற்கான விண்ணப்ப பதிவு கடந்த மே-1 முதல் மே-31 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த ஆண்டு 11 கல்லூரிகள் மூடப்பட்டாலும் தற்போது செயல்பட்டு வரும் 527 கல்லூரிகளில் 1.89 லட்சம் இடங்களுக்கு, 1,41,077 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு, கடந்த ஜூன்-20 ஆம் தேதி ரேண்டம் எண் வெளியானது. இதையடுத்து, மாணவர்களின், கட் - ஆஃப் மதிப்பெண் அடிப்படையிலான, தரவரிசை பட்டியல் கடந்த ஜூன்-22 ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

இந்தநிலையில் மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான குளறுபடியால் பொறியியல் கலந்தாய்வு தள்ளிப்போக வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியானது. ஆனால் தற்போது ஜூலை-17ல் பொறியியல் கலந்தாய்வு தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கலந்தாய்வை நடத்த 35 நாட்கள் ஆகும்.

இதுகுறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறியதாவது,” நீட் தேர்வில் பங்கேற்ற மாணவர்கள், பொறியியல் கல்வியை விட்டுவிட்டு மருத்துவக் கல்விக்கு சென்றுவிட்டால், பொறியியல் கல்லூரி இடங்களில் காலியிடம் அதிகரிக்கக்கூடும் என்பதால் பொறியியல் கலந்தாய்வு தேதி தள்ளிவைக்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் மருத்துவ படிப்பில் குளறுபடிகள் தொடர்ந்து வருவதால் மருத்துவ கலந்தாய்வு எப்போது தொடங்கும் என்பது கேள்வி குறியாகவே உள்ளது. மருத்துவ கலந்தாய்வு முடிந்த பிறகு பொறியியல் கலந்தாய்வை தொடர்ந்தால் அதற்கு போதிய கால அவகாசம் கிடைக்காது. எனவே 17-ஆம் தேதி பொறியியல் கலந்தாய்வு தொடங்கப்படும்.

அதன்படி தொழிற்கல்வி பிரிவு விண்ணப்பதாரர்களுக்குக் கலந்தாய்வு ஜூலை-17-ஆம் தேதியும், மாற்றுத்திறனாளிகளுக்கு ஜூலை-19-ஆம் தேதியும் கலந்தாய்வு தொடங்கும். விளையாட்டு பிரிவினருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஜூலை-19 மற்றும் ஜூலை-20 ஆகிய தேதிகளிலும் அவர்களுக்கான கலந்தாய்வு 21-ஆம் தேதியும் தொடங்கும். மேலும் பொதுப்பிரிவினருக்கு ஜூலை-23 முதல் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும்.

துணை கலந்தாய்வுக்காக ஆகஸ்ட்-16 ஆம் தேதி விண்ணப்பிக்கலாம் என்றும் துணை கலந்தாய்வு(ஏற்கனவே வராமல் போனவர்களுக்கு) 17 ஆம் தேதியும் நடைபெறும். ஆதிதிராவிட மாணவர்களுக்கு ஆகஸ்ட் 18 ஆம் தேதி கலந்தாய்வு நடைபெறும் அன்றுடன் கலந்தாய்வு முடிவதால் செப்டம்பர் 1 ஆம் தேதி கல்லூரிகள் தொடங்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார். .

மேலும் பி.ஆர்க். கல்வி சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் ஆகஸ்ட்-10 ஆம் தேதி வெளியிடப்பட்டு கலந்தாய்வு ஆகஸ்ட் 19 ஆம் தேதி நடைபெறும்.

பொறியியல் கல்லூரியில் கலந்தாய்வு மூலம் சேர்ந்துவிட்டு பின்னர் மருத்துவ கல்வியில் இடம் கிடைத்து மாணவர்கள் சென்று விட்டால் அந்த இடங்கள் காலியாக இருக்கும் எனவே அந்த இடங்களை நிரப்புவதற்கு அடுத்த கல்வியாண்டு முதல் பொறியியல் கலந்தாய்வு இணையவழி மூலமாக நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதற்கான அனைத்துத் தொழில்நுட்ப ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார். மேலும் பொறியியல் கல்வி கட்டணம் தற்போது ரூ. 40 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாகவும், ரூ.45 ஆயிரத்தில் இருந்ததை ரூ.55 ஆயிரமாகவும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.70 ஆயிரத்திலிருந்து ரூ.85 ஆயிரமாகவும் உயர்த்தி கல்வி கட்டணக் குழு நிர்ணயித்தது. அதன்படி இந்த ஆண்டு கல்விக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 14 ஜூலை 2017