மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஜூலை 2017

மதிப்புமிக்க பிராண்டு : பதஞ்சலி ஆதிக்கம்!

மதிப்புமிக்க பிராண்டு : பதஞ்சலி ஆதிக்கம்!

2016ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் மதிப்புமிக்க பிராண்டுகளின் பட்டியலை Ipsos நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், கூகுள் நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது. ஹிந்துஸ்தான் யூனிலிவர், ஐ.டி.சி. போன்ற நிறுவனங்களை விரட்டியடித்து, பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் இப்பட்டியலில் முன்னேறியுள்ளது.

சந்தையில் ஒரு நிறுவனத்தின் மதிப்பு மற்றும் நுகர்வோருக்கு அந்த நிறுவனத்தின் மீது இருக்கும் நம்பிக்கை உள்ளிட்டவற்றை கணக்கிட்டு, இந்தியாவின் மதிப்புமிக்க பிராண்டுகளின் பட்டியலை Ipsos நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ளது. இதில், சில மாதங்களுக்கு முன்னர் தொலைத் தொடர்புச் சந்தையில் புதிதாகக் களமிறங்கிய ரிலையன்ஸ் ஜியோ இந்த வருடம் டாப் 10 பட்டியலில் இடம்பிடித்துள்ளது. Ipsos நிறுவனம் இந்த ஆய்வுக்காக சுமார் 100க்கும் மேற்பட்ட பிராண்டுகளை ஆய்வு செய்து தலைசிறந்த 20 பிராண்டுகளைப் பட்டியலிட்டுள்ளது.

அதில், உலகின் முன்னணி தேடுதல் தளமான கூகுள் முதலிடம் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் மைக்ரோசாஃப்ட் நிறுவனமும், மூன்றாவது இடத்தில் ஃபேஸ்புக் நிறுவனமும் உள்ளது. இந்தியாவின் வேகமாக விற்பனையாகும் நுகர்பொருள் தயாரிப்பு நிறுவனமான பதஞ்சலி நான்காவது இடத்தில் இருக்கிறது. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஐந்தாவது இடத்திலும், அமேசான் ஆறாவது இடத்திலும், சாம்சங் ஏழாவது இடத்திலும், ஏர்டெல் நெட்வொர்க் எட்டாவது இடத்திலும், ரிலையன்ஸ் ஜியோ ஒன்பதாவது இடத்திலும், ஃபிளிப்கார்ட் பத்தாவது இடத்திலும் உள்ளன.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 14 ஜூலை 2017