மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஜூலை 2017

காவல் நிலையங்களுக்கு துப்பாக்கி காவல்!

காவல் நிலையங்களுக்கு துப்பாக்கி காவல்!

சென்னை தேனாம்பேட்டையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதைத் தொடர்ந்து, அனைத்து காவல் நிலையங்களிலும் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டுமென சென்னை மாநகர ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் நேற்று ஜூலை 13ஆம் தேதி அதிகாலை மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து போலீஸ் உயரதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். மேலும் குற்றவாளிகளை கண்டறிய சிசிடிவி காமிராவை ஆராய்ந்தபோது இரண்டு காமிராக்கள் திறன் குறைந்தவையாகவும், இரண்டு காமிராக்கள் வானத்தை நோக்கியும் இருந்தன.

ஆலோசனைக்குப் பிறகு சென்னை மாநகர காவல்துறையினருக்கு,கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் வாய்மொழி உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அதன்படி 24 மணி நேரமும் காவல்நிலையத்தில், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டுமென்றாலும், இது பல காவல் நிலையங்களில் பின்பற்றப்படுவதில்லை. இனிவரும் காலங்களில் காவல் நிலையங்களில் கண்டிப்பாக துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டுமென தெரிவித்துள்ளார். மேலும் அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி காமிரா சரியான முறையில் வேலை செய்கிறதா என்றும் பரிசோதிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 14 ஜூலை 2017