மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஜூலை 2017

வாடகை என்ற வார்த்தையே தெரியாதா?

வாடகை என்ற வார்த்தையே தெரியாதா?

கடந்த வருடம் நவம்பர் மாதம் 8 ஆம் தேதியில் இருந்து நாட்டில் ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார் மோடி. அதன் தாக்கத்தை பொதுமக்கள், வணிகர்கள் மட்டுமல்ல ரிசர்வ் வங்கியும் இன்று வரை அனுபவித்து வருகிறது.

நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளும் தத்தமது கிளைகளில் வசூலிக்கப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளை கணக்கெடுத்து அதற்குரிய ஆவணங்களோடுதான் ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி வைத்திருக்கின்றன.

ஆனால், மத்திய ரிசர்வ் வங்கியோ தன்னிடம் வந்த செல்லாத பழைய நோட்டுகளை இன்னும் எண்ணிக் கொண்டிருப்பதாக அறிவித்திருக்கிறது. அதுவும் குறிப்பாக பழைய ரூபாய் நோட்டுகளை எண்ணுவதற்காக ரிசர்வ் வங்கி புதிய பணம் எண்ணும் இயந்திரங்களை வாங்கியிருப்பதாகவும் தகவல்கள் வந்திருக்கின்றன.

இதுபற்றி முன்னாள் மத்திய நிதி அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான சிதம்பரம் ரிசர்வ் வங்கியை குறை கூறியிருக்கிறார்.

எட்டு மாதங்கள் கழித்தும் இன்னும் பழைய நோட்டுகளை எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். மேலும் இதற்காக காலம் கடந்து புதிய இயந்திரங்களை வாங்கியிருக்கிறார்கள். ஏன் அந்த இயந்திரங்களை வாடகைக்கு எடுத்தே இதை எண்ணி முடித்திருக்க முடியுமே? வாடகை என்ற வார்த்தை இருப்பது ரிசர்வ் வங்கிக்கு தெரியாதா?” என்று தனது ட்விட்டரில் கிண்டல் செய்திருக்கிறார்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 14 ஜூலை 2017