மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஜூலை 2017

திரிஷா : கிராபிக்ஸ் மோகினி!

திரிஷா : கிராபிக்ஸ் மோகினி!

வெற்றிகரமாக பதினைந்து ஆண்டுகளாக கதாநாயகியாக கோலிவுட்டில் வலம் வரும் திரிஷா இன்னும் அதே வேகத்துடன் புத்துணர்ச்சியுடன் இயங்கி வருகிறார். மோகினி, அரவிந்த் சாமியுடன் இணைந்து நடிக்கும் சதுரங்கவேட்டை 2, விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கும் 96, கர்ஜனை, 1818, மற்றுமொரு மலையாளத் திரைப்படம் என கைவசம் அடுத்தடுத்து படங்கள் வைத்துள்ளார். இதில் அவர் வித்தியாசமான வேடமேற்றிருக்கும் மோகினி திரைப்படத்தை படக்குழு விநியோகஸ்தர்களுக்கு திரையிட்டு காண்பித்துள்ளது. விஜய் நடிப்பில் உருவான மதுர திரைப்படத்தை இயக்கிய மாதேஷ் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இது குறித்து இயக்குநர் மாதேஷ் Behindwoods-க்கு அளித்த பேட்டியில், “படத்தை விநியோகஸ்தர்களுக்கு திரையிட்டு காண்பித்தது உண்மை தான். ஆனால் படத்தின் வேலைகள் இன்னும் முழுமையாக முடிவடையவில்லை. படம் அருமையாக வந்துள்ளதால் விநியோகஸ்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். இறுதிகட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. படத்தில் 70 நிமிடங்களுக்கு மேல் கிராபிக்ஸ் காட்சிகள் உபயோகிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் முழுவதும் நிறைவுற்றவுடன் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும். இசை வெளியீட்டை ஆகஸ்ட் மாதத்தின் இறுதியில் நடத்த திட்டமிட்டுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 14 ஜூலை 2017