மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஜூலை 2017

போலீஸ் அதிகாரிகளுடன் முதல்வர்!

போலீஸ் அதிகாரிகளுடன்  முதல்வர்!

வடக்கு மண்டலம், திருச்சி, கரூர் மாவட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு, நேற்று ஜூலை 13ஆம் தேதி டி.ஜி.பி.அலுவலகத்திலிருந்து திடீர் அழைப்பு வந்தது. அதையடுத்து, எஸ்.பி., டி.ஐ.ஜி., ஐ.ஜி, போன்ற அதிகாரிகள், எதற்குக் கூப்பிட்டார்கள் என்று தெரியாமல் பெரும் குழப்பத்திலேயே சென்றார்கள்.

டி.ஜி.பி. அலுவலகத்துக்குச் சென்றவர்களை, அங்கிருந்து தலைமை செயலகத்துக்கு அழைத்துச் சென்றார்கள் காவல்துறை அதிகாரிகள். தலைமைச் செயலகத்தில் முதல்வருடன் நடைபெற்ற கூட்டத்தில், டி.ஜி.பி., ஏ.டி.ஜி.பி, ஐ.ஜி, டி.ஐ.ஜி, எஸ்.பி.-க்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள். அதில் குறிப்பாக மணல் குவாரிகள் அதிகம் உள்ள மாவட்ட அதிகாரிகள்தான் கலந்து கொண்டார்கள்.

கூட்டத்தில் முதல்வர் பேசும்போது, தமிழகத்தில் தற்போது மணல்குவாரியை பொதுப்பணித்துறை ஏற்று நடத்தி வருகிறது. ஆனால், எதிர்பார்த்த அளவில் வருமானம் இல்லை. மேலும், பல இடங்களில் மணல் குவாரிககளை நடத்த முடியவில்லை. மக்கள் போராட்டம், பிரச்னைகள் என்று தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பொதுப்பணித்துறையினருக்கு, காவல்துறை சார்பில் சரியாக ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று ரிப்போர்ட் வருகிறது. மணல் குவாரிகளை பிரச்னைகள் இல்லாமல் நடத்துவதற்கு பொதுப்பணித் துறையினருக்கு போதிய ஒத்துழைப்பு கொடுங்கள். மணல் அள்ளும்போது போராட்டம் நடைபெறாமல் பார்த்துக்குங்க என்று கண்டிப்புடன் பேசியிருக்கிறார் முதல்வர்.

குவாரிகளில் 1000 லாரிகள் போனால், ஒரு நாளைக்கு 200 லாரிகள்தான் லோடு செய்கிறார்களாம், போலீசாருக்கும், பொதுப்பணித் துறையினருக்கும் சுமூகமான உறவு இல்லாத காரணத்தால் இருதரப்புக்கும் இடையே போதிய ஒத்துழைப்பில்லாமல் உள்ளது. மேலும், மணல் குவாரியில் பணப்புழக்கம் அதிகம் இருப்பதால், போலீசார் எதிர்பார்ப்பதை, பொதுப்பணித்துறையினர் விட்டுக் கொடுத்து போனால், குவாரிகள் சுமுகமாக நடைபெறும். போலீஸ்களும் ஆர்வமாகப் பாதுகாப்பு கொடுப்பார்கள் என்கிறார்கள் போலீஸ் அதிகாரிகள்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 14 ஜூலை 2017