மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஜூலை 2017

இலவச பள்ளியைத் தொடங்கிய ராணுவம்!

இலவச பள்ளியைத் தொடங்கிய ராணுவம்!

அனைவருக்கும் கல்வி திட்டம் என்ற அடிப்படையில் ஜம்மு காஷ்மீரில் இலவச திறந்தவெளி பள்ளியை ராணுவம் தொடங்கியுள்ளது.

இந்திய ராணுவம் ’ஆபரேஷன் சாத்பவனா’ (Operation Sadbhavana) என்ற திட்டத்தின் கீழ் கந்தர்பால் மற்றும் சோனமார்க் பகுதியில் இலவசப் பள்ளியை தொடங்கியுள்ளது. இந்தப் பள்ளியில் இலவச புத்தகங்கள், மதிய உணவு மற்றும் இதர வசதிகள் ஆகியவை குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது.

இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் அல்டாஃப் அஹ்மத், நாடோடி சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகள் இந்த முகாம்களில் படித்து வருகிறார்கள். இருட்டில் இருந்த குழந்தைகளை கல்வி என்னும் வெளிச்சத்துக்கு ராணுவத்தினர் அழைத்து வந்துள்ளனர். இந்தக் குழந்தைகள் இதுவரை பள்ளிக்குச் சென்றதேயில்லை. எனவே, இவர்களுக்குக் கல்வி அளிக்கும் நோக்கத்தில் இத்திட்டத்தைத் தொடங்கியுள்ளனர்’ எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ‘ஸ்கூல் சலோ’ (School Chalo) என்ற திட்டத்தின் மூலம் ராணுவத்தினர் தொலைதூர பகுதிகளுக்குச் சென்று குழந்தைகளுக்கு இலவச கல்வி பயிற்சிகள் வழங்கினர். மேலும், கூடுதல் கல்வித் திட்டங்களில் பங்கேற்க வைத்தனர்

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 14 ஜூலை 2017