மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஜூலை 2017

பசு குண்டர்களை பாதுகாக்கும் மத்திய அரசு!

பசு குண்டர்களை பாதுகாக்கும் மத்திய அரசு!

நாடுகள் முழுவதும் மாட்டிறைச்சி உண்ணுவோர் மீது கருத்துத் தாக்குதலும் மாட்டிறைச்சி எடுத்துச் செல்வோர் மீது நேரடித் தாக்குதலும் ஆங்காங்கே நடந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில்… நேற்று முன் தினம் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் அருகே பார்சிங்கெ என்ற கிராமத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக பசு பாதுகாவலர்களால் ஒருவர் தாக்கப்பட்டார். இதுபற்றி மராட்டிய போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில் இதுபோன்ற சம்பவங்கள் பற்றி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில்,

’’பசு பாதுகாப்பு என்ற பெயரில் சிறுபான்மையினருக்கு எதிராகவும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராகவும் பசு குண்டர்கள் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இப்படித் தாக்குதல் நடத்துவோருக்கு மத்திய அரசு அடைக்கலம் அளிப்பதால்தான் இவை தொடர்கின்றன.

பசு பாதுகாப்பு என்ற பெயரில் தலித்துகள், முஸ்லிம்கள் மற்றும் அப்பாவி மக்களைக் குறிவைத்து செயல்படும் தனியார் படைக்கு மத்திய அரசு அனுமதி அளிப்பதோடு , அடைக்கலமும் அளித்து வருகிறது. இவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்பதில் இருந்தே மத்திய அரசின் ஆதரவு உறுதியாகிறது.

இதுபோன்ற தனியார் படைகளை முற்றிலும் தடை செய்ய வேண்டும். இவர்களுக்கு எதிராக சட்டம் தனது கடமையை செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தினார் யெச்சூரி.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 14 ஜூலை 2017