மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஜூலை 2017

மத்திய அரசே பரிந்துரை!

மத்திய அரசே பரிந்துரை!

மத்திய அரசின் ஆலோசனை பெற்றுத் தான் நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமிக்கப்பட்டனர் அதனால் புதுச்சேரி மாநில அரசு நியமன எம்.எல்.ஏ.க்களை ஏற்க வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, கடலூரில் ஜூலை 13-ஆம் தேதி செய்தியாளர்களைச் சந்தித்து அவர் பேசுகையில், “தமிழகத்தில் பாஜக மிக வேகமாக வளர்ந்து வருகிறது. மோடியின் மூன்று ஆண்டு சாதனைகள் கிராமங்கள் தோறும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்தியில் ஊழலற்ற ஆட்சி, நேர்மையான ஆட்சி நடக்கிறது. தமிழகத்தில் லஞ்சம் பெருகி விட்டது என்று நடிகர் கமலஹாசன் கூறியதற்குப் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். கிராம மக்களிடையே ஊழல், லஞ்சம் பற்றிய விழிப்புணர்வு வந்து விட்டது. இலவசங்கள் ஒரு வகையில் லஞ்சம் என்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.

மத்திய அரசு எக்காரணத்தைக் கொண்டும் அதிமுக ஆட்சியையோ, அதிகாரத்தையோ பறிப்பதற்கு தயாராக இல்லை. ஆனால் மாறாக ஒரு கட்சி என்கிற முறையில் பாஜக தமிழகத்தில் உள்ள கட்சிகளை மிஞ்சி வருவதற்கு நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். அதில் வெற்றியும் பெற்று வருகிறோம்.

புதுச்சேரியில் நியமன எம்.எல்.ஏ.க்களை மத்திய அரசின் ஆலோசனை பெற்றே நியமிக்க வேண்டும். அதுதான் நடந்தும் உள்ளது. மேலும் விதிமுறைகளுக்கு உட்பட்டுத் தான் நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அதனை மதிக்க வேண்டும் என்பது மாநில அரசின் கடமை. நியமன எம்.எல்.ஏ.க்களை மாநில அரசு ஏற்க வேண்டும். மேலும் மாநில அரசு தான் நியமன உறுப்பினர்களை நியமிக்க வேண்டும் என்றால் எதற்காக நியமன உறுப்பினர்களை நியமிக்கக் காலதாமதம் செய்தார்கள்? அதில் மத்திய அரசின் ஆலோசனை பெற்று தான் நடக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 14 ஜூலை 2017