மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஜூலை 2017

காயத்ரி சொன்ன ‘சேரி பிஹேவியர்’: கண்ணீர் விட்ட தாய்!

காயத்ரி சொன்ன ‘சேரி பிஹேவியர்’: கண்ணீர் விட்ட தாய்!

விஜய் தொலைக்காட்சியில் கமல் நடத்திவரும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்தே பல்வேறு சர்ச்சைகளைச் சந்தித்து வருகிறது. இந்நிகழ்ச்சி குறித்து மீம்ஸ் கிரியேட்டர்களும் இணையதளவாசிகளும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அதுமட்டுமல்லாது கண்டனங்களும், எதிர்ப்புக்குரல்களும் தற்போது வலுவடைந்துள்ளன. தமிழர்களின் கலாசாரத்தை மீறும் காட்சிகள் நிகழ்ச்சியில் இடம்பெற்றுள்ளன என்றும், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் அவமதிக்கப்பட்டிருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக இந்து மக்கள் கட்சியினர், சென்னை கமி‌ஷனர் அலுவலகத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சி நடத்திவரும் கமலை கைது செய்ய வேண்டுமென ஒருபுறம் புகார் அளித்தனர். அதற்கு மறுப்பு தெரிவித்த கமல் கைது செய்யப்பட்டால், சட்டமும் நீதியும் தன்னைக் காப்பாற்றும் என ஆவேசமாகப் பதிலளித்தார்.

இதன் அடுத்தகட்டமாக கமி‌ஷனர் அலுவலகத்தில் தமிழ் இளைஞர்கள் மற்றும் மாணவர் கூட்டமைப்பினர் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்கு எதிராக ஒரு புகார் அளித்துள்ளனர். நடிகை ஓவியாவை காயத்ரி ரகுராம் ‘சேரி பிஹேவியர்’ என்று திட்டியிருப்பது சேரி மக்களை இழிவுபடுத்திய செயல்; அதனால் வன்கொடுமை தடுப்பு சட்டம், தீண்டாமை ஒழிப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ், காயத்ரி ரகுராம் மீதும், தொலைக்காட்சி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று புகார் அளித்துள்ளனர். இதுமட்டுமல்லாது, காயத்ரி ரகுராமின் இந்தப் பேச்சுக்கு அரசியல் கட்சிகளும், நெட்டிசன்களும் பல்வேறு விமர்சனங்கள் செய்து வருகின்றனர்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 14 ஜூலை 2017