மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஜூலை 2017

மணமகள்கள் விற்பனை!

மணமகள்கள் விற்பனை!

ராஜஸ்தான் மாநிலத்தில் திருமணமாகாத பெண்கள் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை விற்கப்படுவதாகத் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த போக்கு ஹடாவுடி பகுதியை உள்ளடக்கிய கோட்டா, பூந்தி, ஜாலாவார் மற்றும் பரான் ஆகிய கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் ரகசியமாக நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. மஹாசமாரி, பானியா, ஜெயின் போன்ற சமூகங்கள் இப்படிப்பட்ட திருமணங்களைச் செய்து வருவதாகக் கூறப்படுகிறது. ராஜஸ்தானில் ஆண், பெண் மக்கள்தொகை நிலையற்று இருப்பதாகவும், ஆண்களைவிட பெண்கள் குறைவாக உள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி திருமணத்தின்போது ஆண்களுக்குப் பெண்கள் கிடைப்பது அரிதாக உள்ளது. எனவே திருமணமாகாத பெண்கள் ரூ.50 ஆயிரத்தில் இருந்து 1 லட்சம் வரை விற்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ராஜஸ்தான் மட்டுமின்றி அண்டை மாநிலமான மத்தியப்பிரதேசம், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களிலும் பெண்கள் விலைக்கு விற்கப்படுகின்றனர்,

சில மாதங்களுக்கு முன், ஜெய்ப்பூரில் ஒரு குடும்பம் 1.25 லட்சம் ரூபாய்க்கு மணமகளை விலைக்கு வாங்கி, திருமணத்தை நடத்தியது. ஆனால், மூன்று மாதங்கள் கழித்து, அந்த பெண் நகைகள் மற்றும் விலையுயர்ந்த பொருள்களுடன் வீட்டைவிட்டு ஓடிவிட்டார் என்று ஜெய்ப்பூர் அரசுப் பள்ளியின் விரிவுரையாளர் ஒருவர் கூறியுள்ளார். உ.பி., ஜார்கண்ட், சத்தீஸ்கர், பீகார் ஆகிய மாநிலங்களில் வறுமை நிறைந்த கிராமங்களில் இருந்துவந்த பெரும்பாலான பெண்கள் தங்கள் குடும்பங்களுக்குப் பணம் தேவைப்படுவதால் திருமணத்துக்குச் சம்மதம் தெரிவிப்பதாக கூறப்படுகிறது.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 14 ஜூலை 2017