மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஜூலை 2017

ஸ்டார்ஸ் ரியல் ஸ்டோரி - வெங்கட் சுபா

ஸ்டார்ஸ் ரியல் ஸ்டோரி - வெங்கட் சுபா

இந்த வாரம் நம் அலசலில் சிம்பு...

பொதுவாக ஆன்மிகத்தில் ஈடுபாடு... வாழ்க்கையில், ஒழுக்கத்தில் கட்டுப்பாடு... திரையில்கூட பெண்களை, அதாவது சக நடிகைகளைக் கண்ணியமாக நடத்தும் நேர்மை... தன்னை நம்பி காசு போட்டவர்களை ‘முதலாளி’ என்று வார்த்தையால் மட்டுமின்றி மனதாலும் மரியாதை கொடுக்கும் மாமனிதர்... தன்னை நம்பி காசு போட்டவர்களுக்கு லாபம் தந்தே தீர வேண்டும் என்ற பிடிவாதம் மற்றும் அதற்கான முயற்சி... நேரம் தவறாமை... சகலருக்கும் மரியாதை என இவரைப்பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்...

மேலே சொன்ன அனைத்துக்கும் உரியவராகிய ஒரு தமிழனுக்கு, தலைவனுக்கு, இசையமைப்பாளனுக்கு, நடிகனுக்கு, இயக்குநருக்குப் பிறந்த சிம்பு மேலே சொன்ன ஒரு அடைமொழிக்குள்ளும் அடங்காத அசராத, அநியாய நடிகனாக இருப்பது இவரது தந்தைக்கு எவ்வளவு பெரிய அடி; தாங்க முடியாத இடி!

சிறு வயதில் நடிக்க வந்து ‘I am a little star... ஆவேன் நான் சூப்பர் ஸ்டார்’ என்று பாடிய சிம்பு, தன் வயதுக்குரிய, மரியாதைக்குரிய, அறிவுக்குரிய எல்லா படங்களையும் நடித்து முடித்துவிட்டார் போல தோன்றுகிறது.

ஆனால், இவரை வைத்து திரைப்படம் தயாரித்து நல்லபடியாக, நிம்மதியாக லாபம் சம்பாதித்த தயாரிப்பாளர்கள் மிகவும் குறைவு என்பது வருத்தத்துக்குரிய... ஆனால், உண்மைச் செய்தி.

சரி, நஷ்டம் மட்டும் என்றால்கூட பரவாயில்லை; அனுபவித்த கஷ்டங்கள்?

அடேங்கப்பா... ‘ஒஸ்தி’ எடுத்தவர் இன்னமும் கிஸ்தி, திரை, வட்டிதான் கட்டிக்கொண்டிருக்கிறார். இந்தப் படத்தின் துபாய் தேசப் படப்பிடிப்பின் பாடல் காட்சியை முடிக்க முடியாமல், மூடிய அவரது அறை கதவைத் திறக்க முடியாமல் இரண்டு நாள்கள் தயாரிப்பாளரும் இயக்குநரும் பட்ட அவஸ்தையைச் சொல்லால் சொல்ல முடியாது; நஷ்டத்தால் வீண் செலவால்தான் அளக்க முடியும்.

சிலம்பாட்டத்தில் இவரது ஆட்டத்தை தயாரிப்பாளர், பலவான் என்பதால் தாங்கினார். மன்மதனில் ஒரே பாடல் காட்சியின் செலவில் திகிலடித்த கதை எல்லாம் மறக்க முடியுமா? தேனப்பன் எனும் தில் தார் பார்ட்டியைக் கலங்கடித்ததை எழுத்தில் சொல்ல முடியுமா?

இப்படி ஒவ்வொரு படத்திலும் தயாரிப்பாளரை விதம்விதமாகப் படுத்தியதை ஏதேனும் சொல்லி சமாளிக்கலாம். ஆனால், ஒட்டுமொத்தமாக மறுக்க முடியுமா?

AAA படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநரும் முழு உண்மைகளுடன் மனம்திறந்தால் மானம் போய்விடும். இத்தனை கோடி படத்துக்கு ஒழுங்காக படப்பிடிப்புக்கு வந்த நாள்கள் எவ்வளவு தெரியுமா? சொன்னால் அனைவருக்கும் வெட்கக்கேடு.

உண்மையை சொன்னால் வலிக்கும். ஆனால், உண்மையை உணர்ந்தால் புதிய சிம்பு பிறக்க வாய்ப்புண்டு.

இத்தனை குறைகள் சொன்னாலும் அவரது பழக்க வழக்கங்கள் முன்னே பின்னே இருந்தாலும் நடிப்பில், நடனத்தில், திரைப்படம் சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளிலும் இவரது திறமையை ஒரு சதவிகிதம்கூட குறைத்து சொல்ல முடியாது. ஒரு மாபெரும் உயரத்துக்குச் சென்று தனக்கென ஓர் இடத்தைப் பிடிக்கவேண்டிய திறமையான நடிகன்... இப்போதும் முதல் நாள் ஓடிவரும் பாசமிகு, வெறிமிகு ரசிகர்கள் கூட்டத்தைச் சேகரித்து வைத்திருக்கும் நட்சத்திரம்... இன்னமும் பல தூரம் நடக்கவேண்டிய சாதனைகளைக் கடக்க வேண்டிய ஒரு கலைஞன்... வீட்டுக்கும் அடங்காது, இயக்குநருக்கும் அடங்காது, தயாரிப்பாளருக்கும் அடங்காது ஆட்டம் போடுபவனாக இருந்தால் யார் என்ன செய்ய முடியும்? ஒரே ஒருவர் நினைத்தால் எல்லாம் சரியாகலாம்... அவர் யார்? One only TR!

ஆண்டவன் அருளால் அவரது அசராத ஆக்கிரமிப்பினால் அடங்காதவன் அன்பானவனாக மாறட்டும்.

இயக்குநராக விரும்புவதாக சிம்புவே சொன்னதாக தகவல். நல்லதே நடக்கட்டுமே!

காத்திருப்போம்...

ஸ்டார்ஸ் ரியல் ஸ்டோரி - வெங்கட் சுபா - பாகம் 1

ஸ்டார்ஸ் ரியல் ஸ்டோரி - வெங்கட் சுபா - பாகம் 2

ஸ்டார்ஸ் ரியல் ஸ்டோரி - வெங்கட் சுபா - பாகம் 3

ஸ்டார்ஸ் ரியல் ஸ்டோரி - வெங்கட் சுபா - பாகம் 4

ஸ்டார்ஸ் ரியல் ஸ்டோரி - வெங்கட் சுபா - பாகம் 5

ஸ்டார்ஸ் ரியல் ஸ்டோரி - வெங்கட் சுபா - பாகம் 6

ஸ்டார்ஸ் ரியல் ஸ்டோரி - வெங்கட் சுபா - பாகம் 7

ஸ்டார்ஸ் ரியல் ஸ்டோரி - வெங்கட் சுபா - பாகம் 8

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 14 ஜூலை 2017