மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஜூலை 2017

ஜெயலலிதா மர்ம மரணம்: வழக்கு ஒத்திவைப்பு!

ஜெயலலிதா மர்ம மரணம்: வழக்கு ஒத்திவைப்பு!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த போலீஸாருக்கு உத்தரவிடக்கோரிய வழக்கை வருகிற ஜூலை 19ஆம் தேதி ஒத்திவைத்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதால், அதை விசாரிக்க வேண்டும் என்று கடந்த மே 22ஆம் தேதி செல்வ விநாயகம் என்பவர் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்தார். அதில், அதிமுக அம்மா அணியின் பொதுச்செயலாளர் சசிக‌லா, மு‌தலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியின் முன்னாள் முத‌லமைச்சர் பன்னீர்செல்வம் உள்பட சுமார் 186 பேரிடம் விசாரணை நடத்த வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

ஆனால், செல்வ விநாயகத்தின் புகார் மனுவைக் காவல்துறையினர் ஏற்க மறுத்ததையடுத்து, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் செல்வ விநாயகம் இதுகுறித்து வழக்கு தொடந்தார். அதில் த‌னது புகாரைப் பதிவு செய்து விசாரணை செய்யும்படி, தேனாம்பேட்டை காவல் துறையினருக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டுமென்று கோரிக்கை விடுத்தார்.

அதன் பேரில், இந்த வழக்கு சைதாப்பேட்டை நீதிபதி மோகனா முன்பு விசார‌ணைக்கு வந்தபோது, காவல் நிலையத்தில் யார் புகார் தொடுத்தாலும் அதைப் பதிவு செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்‌றம் உத்தரவிட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி வழக்கைப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டுமென்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 14 ஜூலை 2017