மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 14 ஜூலை 2017

தமிழக அரசின் வரி வருவாய் உயர்வு!

தமிழக அரசின் வரி வருவாய் உயர்வு!

2016-17ஆம் நிதியாண்டில் தமிழ்நாட்டின் மொத்த வரி வசூல், அதற்கு முந்தைய நிதியாண்டோடு ஒப்பிடும்போது 10 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அதேசமயம் ரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்ட சரிவால் பதிவுத்துறையின் வருவாய் மட்டும் குறைந்துள்ளது. வணிகவரி மற்றும் பதிவுத்துறையின் மூலம் கிடைத்த வரி என கடந்த நிதியாண்டில் மொத்தமாகத் தமிழக அரசுக்கு வரியாகக் கிடைத்த வருவாயின் மதிப்பு ரூ.67,576 கோடியாகும். இதற்கு முந்தைய நிதியாண்டில் ரூ.61,709 கோடி வசூல் செய்யப்பட்டிருந்தது.

2016-17ஆம் நிதியாண்டில் மதிப்பு கூட்டு வரி (VAT) மூலம் தமிழக அரசுக்குக் கிடைத்த தொகையின் மதிப்பு ரூ.59,262 கோடியாகும். இதற்கு முந்தைய நிதியாண்டில் இதன் மதிப்பு ரூ.54,804 கோடியாகும். கடந்த ஆண்டில் ஏற்பட்ட வர்தா புயலும், மத்திய அரசின் பணமதிப்பழிப்பு நடவடிக்கையும் மாநில அரசின் வரி வருவாயை வெகுவாகப் பாதித்தன. மேலும், மத்திய அரசின் விற்பனை வரியாக ரூ.5,125 கோடியும், தமிழ்நாடு பொது விற்பனை வரியாக ரூ.188 கோடியும், கேளிக்கை வரியாக ரூ.85 கோடியும், ஆடம்பர வரியாக ரூ.379 கோடியும், வாகன நுழைவுக் கட்டணமாக ரூ.2,528 கோடியும், பந்தய வரியாக ரூ.7 கோடியும் தமிழக அரசுக்குக் கிடைத்தது.

அதில் 95 சதவிகித வணிக வரி ஆன்லைன் இ-பேமன்ட் வழியாகச் செலுத்தப்பட்டது. சுமார் 1.70 லட்சம் டீலர்கள் ஆன்லைன் வழியாக வரி செலுத்தியிருந்தனர். 4.35 லட்சத்துக்கும் அதிகமான டீலர்கள் ஆன்லைன் மூலம் மாதாந்திர ரிட்டன் தாக்கல் செய்திருந்தனர். தமிழகத்தில் தோராயமாக 6.5 லட்சம் டீலர்கள் உள்ளனர். தற்போது சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்டு நாடு முழுவதும் ஒரே வரிவிதிப்பு முறைக் கொண்டுவரப்பட்டுள்ளதால் அடுத்த ஆண்டு முதல் மாநில அரசின் வரி வருவாய் குறையும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

3 நிமிட வாசிப்பு

ரேஷன் கடையின் செயல்பாடு: அதிகாரிகளுக்கு உத்தரவு!

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: என்.எல்.சி நிறுவனத்தில் பணி!

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்! ...

4 நிமிட வாசிப்பு

சென்னை: சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் குறித்து புகார் செய்யலாம்!

வெள்ளி 14 ஜூலை 2017